வந்தாச்சு பொங்கல் களைகட்டும் மார்க்கெட்! மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் வியாபாரிகள்!
தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையன்று மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இருக்க சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும்கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக அரசு முடிவு செய்தது.அதனை தொடர்ந்து அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியத்தில் இருந்து அதிகளவு மக்கள் முன்பதிவு செய்தனர்.குறிப்பாக ஆம்னி பேருந்துகளை விட அரசு பேருந்துகளில் தான் முதலில் இருக்கைகள் நிரம்பியது.
மேலும் முன்பதிவுகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் நேற்று முதல் பேருந்துகள் இயக்கப்பட்டது.கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கிய முதல் நாளிலேயே ஒரு லட்சத்துக்கும் மேல் மக்கள் பயணம் செய்தனர்.இந்நிலையில் மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
அந்த அறிவிப்பில் பொங்கல் பண்டிகையையின் கொண்டாட்டம் அனைத்தும் முடிந்து மீண்டும் சென்னைக்கு திரும்பும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இரவு நேரங்களில் பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.ஜனவரி 16,17 ஆம் தேதிகளில் இரவு நேரங்களில் 50 பேருந்துகளும் ஜனவரி 18,19 ஆம் தேதிகளில் அதிகாலையில் 120 பேருந்துகளும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சந்தையில் விற்பனைகள் விறுவிறுபாக நடைபெறுகின்றது.
அந்த வகையில் ஒரு கரும்பின் விலை ரூ20 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யபடுகின்றது.மஞ்சள் ஒரு கட்டு ரூ 100 முதல் ரூ120 வரையும் விற்பனை செய்யபடுகின்றது.மேலும் பொங்கலுக்கு தேவையான இஞ்சி,மஞ்சள்,தோரணங்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்