புழல் சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு! 3 நாட்களில் 2 கைதிகள் மரணம்

Photo of author

By Anand

புழல் சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு! 3 நாட்களில் 2 கைதிகள் மரணம்

Anand

Dead

புழல் சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு! 3 நாட்களில் 2 கைதிகள் மரணம்

புழல் சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்உயிரிழந்துள்ளனர். கடந்த 3 நாட்களில் 2 கைதிகள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த சாகுல் மீரான் (36) போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று அதிகாலையில் சாகுல் மீரானுக்கு நெஞ்சு வலியும், மூச்சுத் திணறல் ஏற்பட்டதினால் சிறைத்துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சாகுல் மீரான் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நேற்று முன்தினமும் சீனிவாசன் என்ற கைதி உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த நிலையில் அடுத்தடுத்து இந்த 3 நாட்களில் 2 கைதிகள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது