வசூல் வேட்டையில் பொன்னியின் செல்வன் 2! படக்குழுவினர் மகிழ்ச்சி!!

Photo of author

By Parthipan K

வசூல் வேட்டையில் பொன்னியின் செல்வன் 2! படக்குழுவினர் மகிழ்ச்சி!!

Parthipan K

Ponnin Selvan, collection hunt

வசூல் வேட்டையில் பொன்னியின் செல்வன் 2! படக்குழுவினர் மகிழ்ச்சி!!

இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் உருவான பொன்னியின் செல்வன் 1 மற்றும் பொன்னியின் செல்வன் 2 திரைக்கு வந்து நல்ல வசூல் பெற்றுள்ளது, மேலும் மக்களிடத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரகுமான் போன்ற முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் 1 திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றது போலவே, பொன்னியின் செல்வன் 2 மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது, மேலும் இந்த பொன்னியின் செல்வன் கதையை படித்து அறிந்த ரசிகர்கள் இப்படத்தை விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த  பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகிய நான்கு நாட்களில் சுமார் 200 கோடியை வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது, மேலும் வெளியான நாள் முதல் இன்று வரை உலக அளவில் 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது குறிபிடத்தக்கது. இன்னும் சில நாட்களில் இந்த படத்தின் வசூல் பல கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.