பொன்னியின் செல்வன்-2 திட்டமிட்டபடி இந்த தேதியில் வெளியாகும்! படக்குழு வெளியிட்ட உறுதியான அறிவிப்பு!

0
438
#image_title

பொன்னியின் செல்வன்-2 திட்டமிட்டபடி இந்த தேதியில் வெளியாகும்! படக்குழு வெளியிட்ட உறுதியான அறிவிப்பு! 

மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் 2 படத்தின் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.

எழுத்தாளர் கல்வி கிருஷ்ணமூர்த்தியின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். மணிரத்தினம் இயக்கிய இந்தத் திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராகியுள்ளது. கடந்த ஆண்டு படத்தின் முதல் பாகம் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகி வசூலில் சாதனை புரிந்தது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், என ஐந்து மொழிகளில் வெளியானது.

இத்திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தனர். இந்நிலையில் முதல் பாகத்தை அடுத்து இரண்டாம் பாகம் ஷூட்டிங் நடைபெற்று வந்தது. இரண்டாம் பாகத்திற்கான பிரமோஷன் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இந்த படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் சில காரணங்களால் பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் ஏப்ரல் மாதம் 28-ந்தேதி வெளியாகும் என்று அறிவித்து அதற்கான ஏற்பாடுகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப காரணங்களால் பொன்னின் செல்வன் 2 வெளியீட்டு தேதி அக்டோபர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்படுவதாக இணையதளங்களில் செய்தி வெளியானது. ஆனால் இதனை மறுத்த படக்குழு திட்டமிட்டபடி பொன்னியின் செல்வன் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்தது.

இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஒரு நிமிடம் ஓடும் இந்த வீடியோவில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம் ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களை விவரித்து உள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் பரவி பரவலாக வைரலாகி வருகிறது.

Previous articleபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! மார்ச் மூன்றாம் தேதி இணையதளத்தில் வெளியீடு!
Next articleஇந்த சிம் வைத்திருப்பவர்களுக்கு வெளியான அதிர்ச்சி செய்தி! ரீசார்ஜ் கட்டணம் பல மடங்கு உயர்வு!