பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அமெரிக்காவில் ரிலீஸ் செய்யும் பிரபல நிறுவனம்!

0
209

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அமெரிக்காவில் ரிலீஸ் செய்யும் பிரபல நிறுவனம்!

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வியாபாரத்தை தற்போது தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளது. படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இயக்குனர் மணிரத்னம் அதை விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் படத்தை அவர் விற்றுவிடும் முடிவில் இருக்கிறாராம். ஆனால் ரெட் ஜெயண்ட் நிறுவனமோ டிஸ்ட்ரிபுயூஷன் முறையில் மட்டுமே படங்களை வாங்குகிறது. இதனால் தமிழகத்தில் இன்னும் ரிலீஸ் செய்யப்போவது யார் என்பது தெரியவில்லை.

தெலுங்கில் தில் ராஜு ரிலீஸ் செய்கிறார். மலையாளத்தில் கோபுரம் கோபாலன் ரிலீஸ் செய்கிறார். இந்நிலையில் இப்போது அமெரிக்காவில் சரிகம சினிமாஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதை அதிகாரப்பூர்வமாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. மற்ற மொழிகள் மற்றும் நாடுகளில் வெளியிடுபவர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படம் இரு பாகங்களாக உருவாகி முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. ஆனால் இரண்டு பாகங்களுக்கான படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

Previous articleவாவ்… கோலியா இது… நெட் பிராக்டிஸில் நடந்த வினோதம்
Next articleஇன்று இந்தியா vs பாகிஸ்தான் போட்டி… இரு நாட்டு உத்தேச அணி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here