வாவ்… கோலியா இது… நெட் பிராக்டிஸில் நடந்த வினோதம்

0
67

வாவ்… கோலியா இது… நெட் பிராக்டிஸில் நடந்த வினோதம்

இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கோலி ஆசியக் கோப்பை தொடரில் ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு விளையாடுகிறார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசியக் கோப்பை போட்டி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகின்றது. இந்த போட்டிதான் இந்த தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக உள்ளது. இந்திய அணியில் கிட்டத்தட்ட 42 நாட்களுக்குப் பிறகு கோலி, இணைந்துள்ளார். இந்த போட்டியில் அவர் இழந்த தன்னுடைய ஃபார்மை மீட்டெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டி அவரின் 100 ஆவது டி 20 போட்டியாகும்.

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 எனக் கிரிக்கெட்டின் மூன்று பார்மட்களிலும் 100 போட்டிகளை நிறைவு செய்யும் இரண்டாவது கிரிக்கெட்டராக கோலி உருவாகியுள்ளார். இதற்கு முன்னர் இதே சாதனையை நியுசிலாந்தின் ராஸ் டெய்லர் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட விராட் கோலியின் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதற்கு முக்கியக் காரணம் இதுவரை கோலி முயற்சி செய்யாத ரிவர்ஸ் ஸ்விப் ஷாட் ஒன்றை அவர் சஹால் பந்தில் விளையாடியுள்ளார்.

கோஹ்லி கவர் டிரைவ்கள் மற்றும் ஸ்ட்ரெய்ட் டிரைவ்கள் போன்ற ஆர்த்தடாக்ஸ் ஷாட்டுகளுக்கு பெயர் பெற்றவர். இதனால், கோஹ்லி க்ளென் மேக்ஸ்வெல் போன்ற ரிவர்ஸ் ஸ்வீப்பை வலைகளில் அடித்ததைப் பார்த்ததும் இணையத்தில் ரசிகர்கள் தங்கள் ஆச்சர்யத்தைத் தெரிவித்துள்ளனர். கோலி பொதுவாக இதுபோன்ற ஷாட்களை விளையாடுவதை அடிக்கடி காண முடியாது.  இதனால் இன்றைய போட்டியில் கோலியின் பேட்டிங்கில் சில மாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம்.