ரசிகர்களைக் கவர்ந்ததா பொன்னியின் செல்வன் சோழா சோழா பாடல்?

Photo of author

By Vinoth

ரசிகர்களைக் கவர்ந்ததா பொன்னியின் செல்வன் சோழா சோழா பாடல்?

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் நேற்று வெளியானது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து வருகின்றனர். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படத்தின் முதல்பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

இதையடுத்து கடந்த ஜூலை 30 ஆம் தேதி ‘பொன்னி நதி பாக்கணுமே’ என்ற பாடல் ரிலீஸாகி கவனம் பெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் கார்த்தி , ஜெயம் ரவி மற்றும் ஜெயராம் ஆகியோர் கலந்துகொண்டனர். இதையடுத்து நேற்று படத்தில் இடம்பெற்ற செகண்ட் சிங்கிள் பாடலான சோழா சோழா பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் வெளியீட்டு நிகழ்வு ஐதராபாத்தில் நடந்தது. இதில் விக்ரம் மற்றும் கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் கலவையான விமர்சனங்களும் எழுந்துள்ளன. பொன்னி நதி பாடல் வெளியான போதும் இதுபோல விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் நாளாக நாளாக அந்த பாடல் ஹிட் ஆனது. அதுபோல இந்த பாடலும் ஹிட் ஆகும் என்று சொல்லப்படுகிறது.

இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன்  படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.