‘பொன்னி நதி’… பொன்னியின் செல்வன் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் அப்டேட்!

Photo of author

By Vinoth

‘பொன்னி நதி’… பொன்னியின் செல்வன் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் அப்டேட்!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே உள்ளது.

இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய 30 ஆண்டுகால கனவுப் கனவுப் படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. ஏற்கனவே படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. பாகுபலி மற்றும் RRR போன்ற படங்களுக்கு போட்டியாக தமிழ் சினிமாவில் இருந்து பொன்னியின் செல்வன் இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் முதல் சிங்கிள் பாடலான ‘பொன்னி நதி’ என்ற பாடலை வரும் ஜூலை 31 ஆம் தேதி இணையத்தில் வெளியிட உள்ளனர். வழக்கமாக மணிரத்னம் படங்களுக்கு பாடல்களை வைரமுத்து எழுதுவார். ஆனால் இந்த முறை பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவர் பாடல் எழுதவில்லை. இளங்கோ கிருஷ்ணன் என்ற கவிஞர் பாடல்களை எழுதியுள்ளார்.