இந்தியாவின் பணக்கார பெண்ணாக உயர்ந்த HCL ரோஷினி… குவியும் வாழ்த்துகள்!

0
102

இந்தியாவின் பணக்கார பெண்ணாக உயர்ந்த HCL ரோஷினி… குவியும் வாழ்த்துகள்!

HCL நிறுவனர் ஷிவ்நாடாரின் மகள் ரோஷினி நாடார் இந்தியாவின் பணக்கார பெண்ணாக உயர்ந்துள்ளார்.

HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ராவின், 2021 ஆம் ஆண்டில் நிகர சொத்து மதிப்பில் 54 சதவீதம் உயர்ந்து ₹ 84,330 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் பணக்காரப் பெண்மணி என்ற இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.

கடந்த சில தினங்களக்கு முன்னர் வெளியிடப்பட்ட கோடக் பிரைவேட் பேங்கிங்-ஹுருன் பட்டியலின்படி, சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு அழகு சார்ந்த பிராண்டான நைக்காவைத் தொடங்குவதற்காக தனது முதலீட்டு வங்கிப் பணியை விட்டு விலகிய ஃபல்குனி நாயர், ₹ 57,520 கோடி நிகர மதிப்புடன் சுயமாக உருவாக்கிய பணக்காரப் பெண்ணாக உருவெடுத்துள்ளார்.  இவர் ரோஷினி நாடாருக்கு அடுத்த இடத்தில் இரண்டாவது பெண் பணக்காரராக உள்ளார்.

இந்த ஆண்டில் தனது செல்வத்தில் 963 சதவீதம் அதிகரிப்பைக் கண்டார், மேலும் ஒட்டுமொத்தமாக இரண்டாவது பணக்காரப் பெண்மணியாகவும் உள்ளார். தமிழகத்தைப் பூர்விகமாக கொண்ட ஷிவ்நாடார் இந்திய அளவில் தகவல் தொழில்நுட்பத்துறையில் கோலோச்சும் ஒரு தொழிலதிபராக வலம் வருகிறார். இப்போது அவரின் குடும்பத்தில் இருந்து மேலும் ஒரு தொழிலதிபர் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.