பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, பிரபு, ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.
இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் வழங்க மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். மேலும், ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.
தற்போது இந்த படத்தில் எந்தெந்த நடிகர், நடிகைகள் எந்தெந்த கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என பட்டியல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த பட்டியலை படக்குழுவினர் வெளியிடவில்லை.
சமூக வலைத்தளங்களில் வெளியான பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களின் பட்டியல்;
சுந்தர சோழர் – பிரகாஷ்ராஜ்
ஆதித்ய கரிகாலன் – விக்ரம்
அருள்மொழி வர்மன் – ஜெயம் ரவி
வந்தியத் தேவன் – கார்த்தி
பெரிய பழுவேட்டரையர் – சரத்குமார்
சின்ன பழுவேட்டரையர் – பார்த்திபன்
கடம்பூர் சம்புவரையர் – நிழல்கள் ரவி
ஆழ்வார்க்கடியான் நம்பி – ஜெயராம்
அநிருத்த பிரம்மராயர் – பிரபு
குந்தவை – த்ரிஷா
நந்தினி – ஐஸ்வர்யா ராய்
பூங்குழலி – ஐஸ்வர்யா லட்சுமி
வானதி – ஷோபிதா
மலையமான் – லால்
சேந்தன் அமுதன் – அஸ்வின்
கந்தன் மாறன் – விக்ரம் பிரபு
மதுராந்தகன் – அர்ஜுன் சிதம்பரம்
பார்த்திபேந்திர பல்லவன் – ரஹ்மான்
குடந்தை ஜோதிடர் – மோகன்ராம்
சோமன் சாம்பவன் – ரியாஸ் கான்
ரவிதாசன் – கிஷோர்