தமிழ்நாடு பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்‌ஷன்… புதிய பென்ச் மார்க்கை செட் செய்த பொன்னியின் செல்வன்!

Photo of author

By Vinoth

தமிழ்நாடு பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்‌ஷன்… புதிய பென்ச் மார்க்கை செட் செய்த பொன்னியின் செல்வன்!

Vinoth

தமிழ்நாடு பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்‌ஷன்… புதிய பென்ச் மார்க்கை செட் செய்த பொன்னியின் செல்வன்!

பொன்னியின் செல்வன் திரைப்படம் தீபாவளியைத் தாண்டியும் இன்னமும் 200க்கும் மேற்பட்ட திரைகளில் கணிசமாக ஓடி வருகிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை எந்த ஒரு படமும் செய்யாத வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றவில்லை. கடந்த வாரம் வெளியாகி தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் சாதனைப் படைத்தது. தமிழகத்தில் மட்டும் இந்த படம் 200 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. இந்த மைல்கல் சாதனையை எட்டிய ஒரே தமிழ்ப் படம் பொன்னியின் செல்வன்தான் என்று சொல்லப்படுகிறது.

தீபாவளியை முன்னிட்டு இந்த படம் அதிகளவிலான திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டு பிரின்ஸ் மற்றும் சர்தார் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின. ஆனால் வெளியான படங்களில் பிரின்ஸ் படம் ரசிகர்களைக் கவராததால், அந்த படம் ஒரு வாரத்துக்குள் தூக்கப்பட்டு இப்போது பொன்னியின் செல்வன் 200க்கும் மேற்பட்ட திரைகளில் ஓடி வருகிறது.

இதன் மூலம் பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ்நாட்டில் 225 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாம். இதுவரை எந்தவொரு தமிழ்ப் படமும் செய்யாத சாதனை. சமீபத்தில் பேய் ஓட்டம் ஓடிய விக்ரம் திரைப்படம் 190 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. அந்த படத்தின் சாதனையை முறியடித்து இப்போது ஒரு புதிய பென்ச் மார்க்கை இந்த படம் நிர்ணயித்துள்ளது.