தீர்ப்புக்குத்தேதி குறித்த நீதிமன்றம்! தப்புமா செந்தில் பாலாஜியின் தலை?

0
78

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி.

அவர் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்து பல நபர்களிடம் கோடி கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி மிக கடுமையாக சாடினார். அதோடு பிற்காலத்தில் ஸ்டாலின் அவர்களும் இதனை மிகக் கடுமையாக விமர்சனம் செய்தார்.

அதிலும் ஸ்டாலின் செந்தில் பாலாஜியை பலவாறு விமர்சனம் செய்தார் அவர் தான் ஊழலின் அடையாளம் என்பது போன்ற மிகக் கடுமையான விமர்சனங்களை அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முன்வைத்து பிரச்சாரம் செய்தார்.

அதோடு அதிமுக ஆட்சி காலம் என்பதால் ஒரு அமைச்சர் தவறு செய்திருக்கிறார் என்று தெரிந்தும் அவர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று ஆளும் கட்சியை கடுமையாக சாடினார் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர்.

ஆனால் காலம் மாற காட்சியும் மாறும் என்ற சொல்லிற்கு ஏற்றவாறு கடந்த 2016 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு இந்த நிலை அப்படியே தலைகீழாக மாறிப்போனது.

அதாவது செந்தில் பாலாஜி திடீரென்று அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் ஐக்கியமானார். அவர் திமுகவிற்கு வந்த பிறகு ஸ்டாலின் அவர்களின் பேச்சு அப்படியே தலைகீழாக மாறிப்போனது.

முன்பு அவரை ஊழல்வாதி என்று கடுமையாக விமர்சனம் செய்த அதே ஸ்டாலின் அவர் திமுகவிற்கு வந்த பிறகு அவருக்கு பாராட்டு பத்திரம் வாசிக்க தொடங்கினார்.

அத்துடன் கரூர் பகுதியில் அவரை சட்டசபை வேட்பாளராக நிறுத்தி அவரை வெற்றியும் பெற வைத்து தன்னுடைய அமைச்சரவையிலும் வைத்துக்கொண்டார் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின்.

ஆனால் செந்தில் பாலாஜி ஊழலில் ஈடுபட்டதாக புகார் இருந்த காலகட்டத்தில் அதிமுகவில் அவர் அமைச்சர் பதவியில் இருந்ததாலும், அதோடு அதிமுக ஆட்சி காலம் என்பதாலும் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளாமல் காவல்துறையினர் அந்த வழக்கை கிடப்பில் போட்டனர்.

காவல்துறையினர் இந்த வழக்கை கிடப்பில் போட்டாலும் சைபர் கிரைம் அவர் மீது வழக்கு மட்டும் பதிவு செய்தது செந்தில் பாலாஜியின் நண்பர்களான பிரபு, சகாயராஜ், தேவசகாயம், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி மற்றும் ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

தற்போது இந்த வழக்கு சென்னை நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

இந்த நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்ற 3 வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்து மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி வி. சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாகவே தன் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது. இதற்கு அமலாக்கத்துறை தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

புகார்தாரர்கள் தரப்பில் ஆதரான வழக்கறிஞர்கள் ஏழ்மையான மக்கள் பண வாங்கிக்கொண்டு ஏமாற்றப்பட்டுள்ளதாகவும், மீண்டும் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் வழக்கை ரத்து செய்யக்கூடாது என்றும் வாதிடப்பட்டது.

காவல்துறையின் தரப்பில் செந்தில் பாலாஜி மீதான புகார் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது அனைத்து தரப்பு வாதங்களையும் நீதிபதி கேட்டுக் கொண்ட நிலையில், செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் மீது வரும் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.