தற்கொலைக்கு முயன்ற பூஜா ஹெக்டே!! காரணம் இதுதானாம் வெளிவந்த அதிர்ச்சியான தகவல்!! 

தற்கொலைக்கு முயன்ற பூஜா ஹெக்டே!! காரணம் இதுதானாம் வெளிவந்த அதிர்ச்சியான தகவல்!! 

பிரபல பீஸ்ட் பட நடிகையான பூஜா ஹெக்டே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக டிவிட்டரில் அதிர்ச்சியான செய்தி வெளியானது. இதனால் இந்த செய்தியை பரப்பியவர்கள் மீது ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.

தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி என்ற படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன் பின்னர் இவர் தெலுங்கு,தமிழ்,இந்தி, உள்பட பல மொழிகளில் நடித்து பிரபலமானார். தமிழில் வாய்ப்புகள் இல்லையேன்றாலும் தெலுங்கு,இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

பூஜா கடந்த 2021-ஆம் ஆண்டு வரை தொடர் வெற்றிகளை கொடுத்து வந்த நிலையில் 2022-இல் நடித்த நான்கு படங்கள் தோல்வியைத் தழுவின.பிரபாஸ் உடன் நடித்த ராதேஷியாம்,விஜய் உடன் நடித்த பீஸ்ட், ஆகிய படங்கள் எதிர்பார்க்கப்பட்ட போதும் தோல்வி படங்களாகவே அமைந்தன.அதன் பின் வந்த ஆச்சார்யா படுதோல்வி அடைந்தது.

அடுத்து சர்க்கஸ் என்ற பாலிவுட் படமும் தோல்வியையே தழுவியது. அடுத்து சல்மான் கானுடன் நடித்த படமும் பூஜாவுக்கு ஏமாற்றத்தையே தந்தது. நடிகர் மகேஷ் – மற்றும்  இயக்குனர் திரிவிக்ரமின் எஸ்எஸ்எம்பி28 படத்தில் பூஜா நடிப்பதாக இருந்த நிலையில்   அந்த படத்தில் இருந்து  விலகி விட்டதாக கூறப்படுகிறது.

பாலிவுட்டில் தொடர் தோல்விகளால் பூஜாவை மற்ற நடிகர்கள் ஏற்றுக்கொள்வதில்லை, என கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் பாலிவுட் விமர்சகர் உமைர் சந்து பூஜா தற்கொலைக்கு முயன்றதாக டுவிட் செய்தார். கடந்த 2 வாரங்களாக பூஜா மன உளைச்சலில் இருந்ததாகவும் இதனால் அந்த செயலை செய்ததாகவும், அவரது குடுமப்த்தினர் காப்பாற்றியதாகவும் கூறி இருந்தார்.

இவரின் இந்த பதிவால் கோபமடைந்த ரசிகர்கள் வேறு ஒன்றும் உங்களுக்கு கிடைக்கவில்லையா?? இப்படி பொய் பிரச்சாரம் செய்கின்றீர்களே? என விமர்சித்தனர். அதனை தொடர்ந்து பூஜா சார்பில் அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.