தளபதியின் ‘பீஸ்ட்’ படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு!! பூஜா ஹெக்டா வெளியிட்ட போட்டோ!!

0
186

தளபதியின் ‘பீஸ்ட்’ படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு!! பூஜா ஹெக்டா வெளியிட்ட போட்டோ!!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கப்பட்டு இருக்கின்றது.

கோலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட் ஆகும். இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கின்றார்.

அத்துடன் அமர்நாத் மற்றும் விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில் சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. அத்துடன் பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கப்பட்டு இருப்பதாக நடிகை பூஜா ஹெக்டே தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

மேலும் படபிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு உள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் பீஸ்ட் படத்திற்காக காத்திருக்கின்றோம், எப்போது வரும் என்று விரைவில் அதனையும் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிடுங்கள் என்று கூறியிருக்கின்றனர்.

Previous articleகவர்ச்சியான உடையில் கிறக்கத்தை ஏற்படுத்திய ராய் ரஷ்மி!! தூக்கத்தை இழந்து நிற்கும் ரசிகர்கள்!!
Next articleயப்பா… ரொம்ப பயமா இருக்குங்க!! கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் நீருக்குள் சாகசம் புரியும் பாரதி கண்ணம்மா வெண்பா!!