தங்கும் விடுதியில் தரங்கெட்ட தொழில்! கோவையில் பகீர் சம்பவம்!

Photo of author

By Amutha

தங்கும் விடுதியில் தரங்கெட்ட தொழில்! கோவையில் பகீர் சம்பவம்!

கோவை அருகே மேட்டுப்பாளையத்தில் உள்ள தங்கும் விடுதியில் விபச்சார தொழிலில் ஈடுபட்ட விடுதி உரிமையாளர் மற்றும் பெண் கைது.

நீலகிரி மாவட்டம் எம்.பாலடா பகுதியைச் சேர்ந்த விவசாயி சந்தோஷ் வயது 38. இவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உடன் விவசாயம் செய்து வருகிறார். விவசாயத்தின் மூலம் விளைந்த காய்கறிகளை அருகிலுள்ள மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிக்கு கொண்டு செல்வது வழக்கம். இதேபோல் நேற்று தன் வயலில் விழுந்த காய்கறிகளை மேட்டுப்பாளையம் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வந்து விட்டு மிகவும் அசதியாக இருந்ததால் தங்கும் விடுதியில் அறை எடுத்து ஓய்வெடுக்க நினைத்தார்.

இதனை அடுத்து அவர் மேட்டுப்பாளையம் கல்லார் பகுதியில் உள்ள ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான கல்லார் காட்டேஜில் தங்குவதற்கு அறை ஒன்றினை பதிவு செய்துள்ளார்.

அப்போது அவரின் பெயர் மற்றும் விலாசம் அறிந்து ராஜ் சுந்தர் என்பவர் அறை ஒதுக்கி கொடுத்ததாகவும் மேலும் எங்கள் காட்டேஜில் அழகான பெண்களுடன் ஜாலியாக இருக்கலாம் எனவும் கூறி மற்றொரு அறையில் இருந்த ராஜ்குமாரிடம் அறிமுகப்படுத்தியுள்ளார்.

அங்கிருந்த ராஜ்குமார் சந்தோஷிடம் ரூ.2000 கொடுத்தால் விதவிதமான அழகான பெண்களை வெளியில் இருந்து வரவழைப்போம் எனக் கூறியுள்ளார். இதைக் கேட்டு திடுக்கிட்ட சந்தோஷ் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சந்தோஷின் புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், உதவி காவல் ஆய்வாளர் முருகநாதன், மற்றும் தனிப்பிரிவு காவலர்கள் கருப்புசாமி,விக்னேஷ் ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்டேஜுக்கு சென்று அங்கிருந்த பெண் மற்றும் ஆண்கள் இருவரை கைது செய்தனர்.

இவர்களில் ஒருவர் மேட்டுப்பாளையம் ஊட்டி ரோட்டில் உள்ள ரயில்வே கேட் பகுதியைச் சார்ந்த பெரிய பாண்டி மகன் ராஜ்குமார் வயது- 38. இவர்தான் அந்த காட்டேஜின் உரிமையாளர் ஆவார். இன்னொருவர் மேட்டுப்பாளையம் கல்லார் ரயில்வே கேட் பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் மகன் ராஜ் சுந்தர் வயது- 31 என தெரியவந்தது. மூவரையும் கைது செய்த போலீசார் மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன் ஆஜர் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ராஜ்குமார் மற்றும் ராஜ் சுந்தர் ஆகிய இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து இவர்கள் இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். தங்கும் விடுதியில் விபச்சாரத் தொழில் பகீங்கரமாக நடைபெறுவது அந்தப் பகுதியில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.