99 க்கு பாப்கான் பெப்சி காம்போ!! தியேட்டரில் சூப்பரான அறிவிப்பு!!

Photo of author

By CineDesk

99 க்கு பாப்கான் பெப்சி காம்போ!! தியேட்டரில் சூப்பரான அறிவிப்பு!!

CineDesk

Popcorn Pepsi Combo for 99!! Great announcement in theater!!

99 க்கு பாப்கான் பெப்சி காம்போ!! தியேட்டரில் சூப்பரான அறிவிப்பு!!

இப்பொழுது இருக்கும் நிலைமையில், எந்த பொருள் வாங்கினாலும் அதற்கு ஜிஎஸ்டி தொகையை மக்கள் அனைவரும் செலுத்தி வருகின்றனர். மக்கள் அன்றாடப் பயன்படுத்தும் அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வருகிறது.

அதாவது, அத்தியாவசியப் பொருட்களான பால் முதலிய பொருட்களைத் தவிர நாம் தினமும் வாங்க கூடிய அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டி என்னபடும் வரியை செலுத்திக் கொண்டுதான் இருக்கிறோம்.

திரையரங்குகளில் விற்கப்பட கூடிய உணவுப் பொருட்களில் ஜிஎஸ்டி வரி செலுத்துவதை எதிர்த்து வாடிக்கையாளர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் புகார் கூறி இருந்தார்.

இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பாக டெல்லி மாநிலத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில், திரையரங்குகளில் வழங்கப்பட கூடிய உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, பிவிஆர் சினிமாஸ் திரையரங்கில் வழங்கப்பட கூடிய உணவுப் பொருட்களுக்கு தள்ளுபடியை அறிவித்தது. இதனையடுத்து இதற்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டு, வெறும் 99 ரூபாய்க்கு பாப்கான் மற்றும் பெப்சி காம்போவை பிவிஆர் சினிமாஸ் திரையரங்கம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த தள்ளுபடி விற்பனையை தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களிலும் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உணவுப் பொருட்களுக்கான தள்ளுபடி விற்பனை விரைவில் தமிழ்நாட்டிலும் செயலபடுத்தப்படும் என்று கூறப்படுகிறது.இதனால் வாடிக்கையாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதுப்போலவே மற்ற பொருட்களுக்கும் இந்த ஜிஎஸ்டி வரியை குறைத்தால் நன்றாக இருக்கும் என்று மக்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.