விரைவில் முடியப்போகும் விஜய் டிவியின் பிரபல சீரியல்
விஜய் டிவியில் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் என்னும் சீரியல் விரைவில் முடியப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிவசங்கர் அவர்களின் இயக்கத்தில் ப்ரியா தம்பி எழுத்தில், உருவாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர். ஸ்டாலின், சுஜிதா, குமரன் தங்கராஜன், வெங்கட் ரங்கநாதன், காவியா, ஹேமா ராஜ்குமார் சரவணன் விக்ரம் உள்ளிட்டோர் நடிக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தற்போது பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இந்த சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் தற்போது ஓராண்டு காலமாக இந்த சீரியலின் கதை சரியில்லை என்று ரசிகர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சீரியலில் விரைவில் முடிக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களின் வழியாக ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கதையே இல்லாமல் ஏதோ ஒரு கதையை வைத்து ஒளிபரப்பு செய்யப்படுவதாக பாண்டியன் ஸ்டோர் மீது ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியல், விரைவில் முடிவடைய போவதாகவும் விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கு மாறாக விஜய் தொலைக்காட்சி புதிய சீரியல் ஒன்றை உருவாக்கி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.