Breaking News, Cinema, News, State

தெலுங்கு நடிகருடன் இணையும் பிரபல தமிழ் நடிகை!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

Photo of author

By Jeevitha

தெலுங்கு நடிகருடன் இணையும் பிரபல தமிழ் நடிகை!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

Jeevitha

Button

தெலுங்கு நடிகருடன் இணையும் பிரபல தமிழ் நடிகை!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

தெலுங்கு திரைப்பட நடிகராக சிரஞ்சீவி உள்ளார். தற்போது அவருக்கு ஜோடியாக தமிழ் நடிகை த்ரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  த்ரிஷா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக வலம் வருகிறார். இவருக்கு 40 வயது ஆகிறது.

இவர் முதலில் மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் அதனையடுத்து இவர் சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, கிரீடம் போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் தளபதி விஜய், விக்ரம், சூர்யா, அஜித் போன்ற பிரபல நடிகர்களுடனும் நடித்துள்ளார். இதனையடுத்து அவர் பொன்னியன் செல்வன் என்ற சோழ வரலாறு திரைப்படத்தில் குந்தவியாக நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் தனது அழகான நடிப்பை  வெளிபடுத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

இந்த நிலையில் தளபதி   லியோ படத்தில் விஜய்க்கு த்ரிஷா  ஜோடியாக நடித்துள்ளார். அதனையடுத்து தற்போது தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி படத்தில் அவருக்கு ஜோடிகாக நடிக்கவுள்ளார். அந்த படத்திற்காக த்ரிஷாவிடம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் ஏற்கவனவே 2006 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்டாலின் என்ற படத்தில் நடித்துள்ளார்கள்.

மேலும் அந்த படத்தில் சிரஞ்சீவிக்கு மனைவியாக த்ரிஷா நடித்திருந்தார். இவர்கள் மீண்டும் 17 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடியாக நடிக்க உள்ளார்கள். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!! இணையத்தில் வைரல்!! 

கமல் மனசுக்குள் போட்ட பிளான்!! இளம் ஹீரோக்களை வைத்து படம்!!