கமல் மனசுக்குள் போட்ட பிளான்!! இளம் ஹீரோக்களை வைத்து படம்!!

0
131
The plan put in Kamal's mind!! Film with young heroes!!
The plan put in Kamal's mind!! Film with young heroes!!

கமல் மனசுக்குள் போட்ட பிளான்!! இளம் ஹீரோக்களை வைத்து படம்!!

கமல் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் விக்ரம்.இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். இந்த படம் வெற்றியடைந்ததை அடுத்து கமல் எப்பொழுதும்  எதோ காலில் பம்பரம் சுற்றியது போல்  சுற்றி கொண்டே இருந்தார்.

இதனை தொடர்ந்து கமல் நடிப்பில் நீண்ட காலமாக இழுவையில் இருந்த படம் இந்தியன் 2 தற்பொழுது இந்த படத்தின் படபிடிப்பு பணிகளும் முடிவடைந்து விட்டது.

அடுத்து கமல், எச்.வினோத் அவர்களின் இயக்கத்தில் படம் நடிக்க இருக்கின்றார்.இதனை உறுதி படுத்தும் விதமாக எச்.வினோத் அவர்கள் கார் ஒன்றை கமலுக்கு பரிசாக கொடுத்துள்ளார்.

இதனால் கமலின் நடிப்பில் இன்னொரு தரமான படத்தை பார்க்கலாம் என்று ரசிகர்கள் எதிபார்கின்றனர்.இந்தநிலையில் கமல் எச்.வினோத்தின் இயக்கத்தில் நடிக்கவில்லை என்றும் தெலுங்கு படம் ஒன்றில் பிரபாஹுக்கு வில்லனாக நடிக்க இருக்கின்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் எச்.வினோத் இனி கமலை நம்பி எந்த பயனும் இல்லை அடுத்தாக விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபுவை வைத்து படம் பண்ண இருக்கிறார் என்ற பேச்சுக்கள் கிளம்பியுள்ளது.

அதனால் ரசிகர்கள் இவர்கள் இயக்கத்தில் கமல் நடிப்பார என்ற குழப்பத்தில் உள்ளனர். இதனை தொடர்ந்து பிக் பாஸ் பாகம் 3 தொடங்கவிருக்கின்ற நிலையில் கமலின் கவனம் முழுவதும் அங்கு தான் இருக்கும்.

அவர் பிக் பாஸ் பாகம் 3யை தொகுப்பதற்கே அதிக முனைப்பு காட்டுகின்றார். அது மட்டுமல்லாமல் கமலுக்கு படங்களை விட அந்த நிகழ்ச்சியை தொகுபதற்கே அதிக அளவு சம்பளம் வழங்கப்படுகின்றது.

இதனால் கமல் எதையோ ஒன்றை மறைத்து வைத்து கொண்டு பிளான் பண்ணுகின்றார்.அதன்படி நடிப்பதை விட இளம் ஹீரோக்களை வைத்து படம் பண்ணுவதிலேயே அதிக அளவு கவனம் செலுத்துகின்றார்.