World

பிரபல தொலைக்காட்சியில் வானிலை செய்திகளின் போது ஒளிபரப்பான ஆபாச காட்சிகள், எந்த சேனல் தெரியுமா?

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் வானிலை செய்திகளின் போது தவறுதலாக ஆபாச காட்சிகள் ஒளிபரப்பாகி இருக்கிறது.

தொலைக்காட்சி ஒன்றில் மாலை நேர செய்தி தொகுப்பின் போது, வானிலை அறிக்கை செய்திகள் வாசிக்கப்பட்டு இருந்த போது ஸ்க்ரீனில் வானிலை தொடர்பான காட்சிகளுக்கு பதிலாக ஆபாச காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு இருக்கின்றன.

அந்த வானிலை அறிக்கை வாசித்தவரும் ஒளிபரப்பப்படும் வீடியோ எது என தெரியாமல் அறிக்கைகளை தொடர்ந்து வாசித்து கொண்டு இருந்து இருக்கிறார்.

அந்த ஆபாச கிளிப் ஆனாது ஏறக்குறைய 13 வினாடிகள் ஒளிபரப்பாகி இருக்கிறது. இதனால் கோபமுற்ற பொது மக்கள் பலரும் அந்த தனியார் சேனலுக்கு எதிராக புகார் அளித்துள்ளனர்.

இந்த தர்மசங்கடமான நிகழ்வு அமெரிக்காவின் வாஷிங்டன்னில் KREM என்னும் சேனலில் நடந்து இருக்கிறது.

இந்த சேனலின் நேற்று மாலை 6 மணி செய்தி தொகுப்பின் போது பிரபல வானிலை அறிக்கையாளர் மைக்கேல் போஸ் வானிலை அறிக்கை தொகுத்து கொண்டிருக்கும் போது இது போன்ற நிகழ்வு நடந்து இருக்கிறது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment