மாதம் ரூ. 9,250 வருமானம் தரும் சூப்பர் போஸ்ட் ஆபிஸ் ஸ்கீம்.. உடனே ஜாயின் பண்ணுங்க!!

Photo of author

By Gayathri

இந்தியாவில் வங்கிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நாம் தபால் நிலையங்களுக்கு செல்வதே இல்லை. முந்தைய காலத்தில் எல்லாம் அதிக அளவிலான மக்கள் இந்த தபால் நிலையங்களிலும் அதில் உள்ள சில திட்டங்களிலும் தான் தங்கள் பணத்தை சேமித்து வைத்து வந்தனர். போஸ்ட் ஆபிஸ்களில் நாம் பணத்தை சேமித்து வைப்பதன் மூலம் அப்பணம் பாதுகாப்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அதற்கான லாபமும் நமக்கு கிடைக்கும்.

இதுமட்டுமின்றி நிரத்த வைப்புத்தொகையுடன் சேர்ந்து மாதாமாதம் வருமானம் பெறும் பல திட்டங்கள் மத்திய அரசு சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அரசாங்க உத்திரவாதத்துடன் உடைய திட்டங்கள் ஆகும். எனவே நாம் இந்த திட்டங்களில் எந்தவித அச்சமும் இன்றி முதலீடு செய்யலாம்.

இந்நிலையில் இப்போது நாம் இப்பதிவில் வீட்டில் இருந்தபடியே ரூ. 9,250 வருமானம் தரும் ஒரு மாதாந்திர சேமிப்புத் திட்டம் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

இந்த மாதாந்திர திட்டத்தின் படி நாம் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடாக செலுத்தும் போது அதற்கு வட்டியாக 7.4% தொகை வழங்கப்படும். இந்த மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் தனிநபராகவே அல்லது இரண்டு, மூன்று நபர்கள் சேர்ந்து கூட்டாகவே கணக்குத் தொடங்கலாம். இந்த திட்டத்தில் தனிநபர் கணக்கில் அதிகபட்சமாக 9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். மேலும் இரண்டு அல்லது மூன்று நபர்கள் கொண்ட கணக்கில் அதிகபட்சமாக 15 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

இந்த திட்டத்தின் மூலம் நாம் போஸ்ட் ஆபிஸில் கணக்கு தொடங்கிய ஐந்து ஆண்டுகள் வரை நம்மால் முதலீட்டு தொகையை எடுக்க முடியாது. அவசர தேவைகளுக்காக எடுக்க வேண்டும் என்றாலும் ஒரு வருடம் முடியாமல் எடுக்க முடியாது. ஒரு வருடத்திற்கு பின்பு அபராதம் செலுத்தி வேண்டுமானால் அந்த முதலீட்டு தொகையை எடுத்துக் கொள்ளலாம்.

பணத்தை முதலீடு செய்த ஐந்து வருடங்களுக்கு முன் முதலீட்டு தொகையை எடுத்தால் நம் முதலீட்டு தொகையில் 2% கழிக்கப்படும். இவ்வாறு இல்லாமல் 5 வருடம் கழித்து நம் முதலீட்டு தொகையை எடுக்கும் போது நாம் முழு தொகையையும் பெறலாம். இந்த திட்டத்தின் மூலம் மாதம் மாதம் வழங்கப்படும் வட்டி உங்கள் தபால் கணக்கில் செலுத்தப்படும்.

இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் போது நமக்கு 7.4% வட்டி வழங்கப்படும். எனவே நாம் இந்த மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் ரூ. 5 லட்சம் முதலீடாக செலுத்தினால் நமக்கு ரூ. 3,083 மாதா மாதம் வட்டியாக கிடைக்கும். மேலும் ரூ. 9 லட்சம் செலுத்தினால் வட்டியாக ரூ. 5,550 கிடைக்கும். அதுவே 2 அல்லது மூன்று பேர் சேர்ந்து தொடங்கும் கூட்டுக்கணக்கில் ரூ. 15 லட்சம் முதலீடு தொகையாக கட்டினால் மாதம் வட்டியாக ரூ. 9,250 கிடைக்கும். நாம் இப்பதிவில் வீட்டில் இருந்தபடியே மாதம் ரூ. 9,250 வருமானம் தரும் ஒரு மாதாந்திர சேமிப்பு திட்டம் பற்றி பார்த்துள்ளோம்.