போஸ்ட் ஆபிஸ் வேலை! விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்!!

Photo of author

By Divya

போஸ்ட் ஆபிஸ் வேலை! விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்!!

மத்திய அரசுக்கு கீழ் இயங்கி வரும் போஸ்ட் ஆபிஸில் காலியாக உள்ள ‘கார் ஓட்டுநர்’ பணிக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிக்கு தகுதி,விருப்பம் உள்ள நபர்கள் மே 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை

பணி: கார் ஓட்டுநர்

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 27 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

கார் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அது மட்டுமின்றி கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்களுக்கு குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயது 27 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஊதிய விவரம்:

கார் ஓட்டுநர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

கார் ஓட்டுநர் பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 14-05-2024