போஸ்ட் ஆபீஸ் இன் மாதாந்திர வருமான திட்டம்!! ஒரு வருடத்திற்கு 1 லட்சம் ரூபாய்!!

Photo of author

By Gayathri

போஸ்ட் ஆபீஸில் நாம் முதலீடு செய்யக்கூடிய தொகைக்கு ஒவ்வொரு மாதமும் வருமானம் வரும் வகையில் போஸ்ட் ஆபீஸ் இன் மன்த்லி இன்கம் ஸ்கீம் ( POMIS) உருவாக்கப்பட்டிருக்கிறது.

Monthly Income Scheme :-

போஸ்ட் ஆபீஸ் MIS திட்டம் என்பது பிற திட்டங்களைப் போலவே மக்களுக்கு வழங்கப்படும் சேமிப்புத் திட்டமாகும். இதில் ஒவ்வொரு மாதமும் நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு ஏற்ப வட்டி வருமானம் வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் இணைந்து மொத்தமாக குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும்.அதன் பிறகு 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து உங்களுக்கு வட்டி வருமானம் வழங்கப்படும்.இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள்.

தனிநபர் கணக்கு திறந்தால் ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். அதுவே கூட்டுக் கணக்காக திறக்கும் பட்சத்தில் ரூ.15 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இதை வைத்தே 5 ஆண்டுகளுக்கு வட்டி வருமானம் பெறலாம். மேலே கூறப்பட்டுள்ள வரம்பு அதிகபட்ச தொகை ஆகும்.

தற்போது போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமானத் திட்டத்திற்கு 7.4 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதத்தை அரசு காலாண்டுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கும். அப்படி கடந்த 3 காலாண்டுகளாக எந்தவித மாற்றமும் இல்லாமல் 7.4 சதவீத வட்டி விகிதத்தில் மக்களுக்கு பலன் அளித்து வருகிறது.

உதாரணம் :-

MIS திட்டத்தில் நீங்கள் தனிநபர் கணக்கைத் திறக்கலாம் அல்லது வேறு ஒருவருடன் இணைந்து கூட்டு கணக்கைத் திறக்கலாம். 2 அல்லது 3 பேர் சேர்ந்தும் கூட்டுக்கணக்கைத் தொடங்க முடியும்.

ஒரு குடும்பத்தில் உள்ள கணவன் மனைவி இருவரும் இணைந்து 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யும் பொழுது, 7.4 சதவீத வட்டி விகிதத்தில் மாத வருமானமாக 9,250 ரூபாய் பெற்றுக் கொள்ளலாம். அப்படியானால் வருடத்திற்கு 1,11,000 ரூபாய் பலன் கிடைக்கும்.

தனிநபர் கணக்கில் 9 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படுகிறது என்றால், இதற்கு 7.4 சதவீத வட்டி விகிதம் வழங்கப்பட்டால் மாத வருமானமாக 5,550 ரூபாய் கிடைக்கும். அப்படியானால் வருடத்திற்கு 66,600 ரூபாய் வருமானமாக பெற முடியும்.