தற்சமயம் மக்களிடையே பெரிதும் வருங்கால நிதி குறித்து அவர்னஸ் இருந்து வருகின்றது. பலரும் நல்ல பிளாட்பார்மை தேடி இன்வெஸ்ட்மென்ட் செய்து வருகின்றனர். குட் ரிட்டன்ஸ் கிடைக்கும் ஸ்கீமில் இன்வர்ஸ்ட் செய்தால் தான் நல்ல வேல்யுவான பணம் ரிட்டன் கிடைக்கும். மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மற்றும் பங்குச்சந்தை ஆகியவை சந்தை அபாயத்திற்கு உற்பட்டவை. இதனால் பெரும்பாலும் மக்கள் இதனை தவிர்த்து விடுகின்றனர். இதற்கு மாற்றாகத்தான் அதிகபட்சமாக 7.1% வட்டி விகிதம் தரும் போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம் பற்றி இந்த பதிவில் காண்போம்.
நாம் இன்வெர்ஸ் செய்யும் பணத்தைப் பொறுத்து மில்லினியராக மாறலாம். பி பி எஃப் இது ஒரு பொது வைப்பு நிதி. இதன் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். நல்ல ரிட்டர்ன் கிடைக்க வேண்டும் என்றால் இதை 25 ஆண்டுகளாக நீட்டித்துக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு ரூ.70 வீதம் சேர்த்தால் வருடத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் இந்த கணக்கில் சேமித்து வைக்கலாம். இதன்படி 15 ஆண்டுகள் செய்ய வேண்டும். 15 ஆண்டுகளுக்குப் பின் சேமித்து வைத்த பணத்திற்கு கிட்டத்தட்ட மூன்று லட்சம் ரூபாய் கூடுதல் வட்டியாக ரிட்டன் வரும். இந்த கணக்கில் சேமிக்கும் பணத்திற்கு முற்றிலும் வரி செலுத்த தேவை கிடையாது. இதனை வருடத்திற்கு 1.5 லட்சம் வீதம் 25 ஆண்டுகள் கணக்கை நீட்டித்து, சேர்த்து வைத்தால் ரிட்டன்ஸ் ஒரு கோடிக்கும் மேலாக கிடைக்கும். இது முற்றிலும் லாபகரமானது மற்றும் பணம் குறித்த அச்சுறுத்தல் தேவை இல்லை.