தொடங்கியது தபால் வாக்கு பதிவு! தமிழகத்தின் திக் திக் நிமிடங்கள்!

Photo of author

By Rupa

தொடங்கியது தபால் வாக்கு பதிவு! தமிழகத்தின் திக் திக் நிமிடங்கள்!

தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் மக்கள் வாக்குகளை பெற ஆளும்கட்சி மற்றும் எதிர் கட்சி இரண்டு கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் வாக்குகளை சேகரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.கொரோனா 2 வது அலை உருவாகி வரும் இந்த காலக்கட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்கள்,முதியவர்கள்,ஊனமுற்றோர் என அனைவரின் வாக்குகளையும் தபால் வாக்குகளாக செலுத்தலாம் என தேர்தல் ஆணையம் ஆணை பிறப்பித்தது.

இந்த தபால் வாக்கு பதிவானது இன்று தொடங்கியது.சென்னை உள்ளிட்ட 16 தொகுதிகளில் தபால் வாக்கு பதிவு இன்று ஆரபித்தது.அந்தவகையில் தபால் வாக்குகளை செலுத்த தமிழகத்தில் மட்டும் விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 2,44,000 பேராக உள்ளது.சென்னையில் மட்டும் 12,000 பேர் விண்ணபித்திருந்தனர்.அதில் 7,300 விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது.மீதி விண்ணப்பித்திருந்த 4000 ற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை ரத்து செய்த்துவிட்டனர்.

சென்னையில் 16 தொகுதிகளில் தபால் வாக்குகளை பெற 70 குழுக்களை நியமித்துள்ளனர்.ஒவ்வொரு குழுவும் நாளொன்றுக்கு 15  வாக்குகளை பெற திட்டமிட்டுள்ளது.முதல் கட்டமாக தபால் வாக்கு பதிவு தொடங்கியது தமிழகத்திற்குப் திக் திக் நிமிடங்களாக உள்ளது.