தபால் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்! கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா இல்லையா என்ற கேள்வி?
ஈரோடு மாவட்டத்தில் தபால் ஊழியர் சங்க கோட்ட செயலாளர் வெள்ளியங்கிரி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் ஈரோடு தபால் துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தபால் துறையை தனியார் மையமாக்கும் முடிவை கைவிட வேண்டும் போன்ற 20 அம்ச கோரிகளை வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் உட்பட பல்வேறு சமூகங்களில் இருந்து ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதற்காக முடிவு செய்திருந்தது.
அந்த வகையில் நாடு முழுவதும் தபால் துறை ஊழியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள தலைமை தபால் அலுவலகங்கள் துணை தபால் அலுவலகங்கள் துணை தபால் அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் எவரும் பணிக்கு வரவில்லை எனவும் கூறினார். மேலும் இதனால் தபால் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தபால் அலுவலகங்களை திறக்கப்பட்டு இருந்தாலும் ஒரு சில ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வருகின்றார்கள் எனவும் கூறினார்.
மேலும் தபால் துறையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்க முயற்சிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் கூறினார். சேமிப்பு பிரிவை இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கி மாற்றுவதை திரும்ப பெற வேண்டும். மேலும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் தொழிற்சங்கங்கள் மீதான தாக்குதல் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி விட வேண்டும் எனவும் கூறினார். கொரோனா பரவலால் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 10 லட்சம் நிவாரண நிதியாக கொடுக்க வேண்டும் எனவும் குடும்பத்தில் ஒருவருக்கு தபால் துறை அல்லது அரசு வேலையும் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கை உட்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
மேலும் இந்த போராட்டத்தில் அலுவலக கண்காணிப்பாளர்கள் அதிகாரிகள் சிலரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்காது அஞ்சல் துறையில் உள்ள அனைத்து சம்மேளங்கள் தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ஈரோடு, கோபி, பவானியில் உள்ள மூன்று தலைமை தபால் அலுவலகங்கள் 65 துணை தபால் அலுவலகங்கள் 252 கிளை தபால் அலுவலகங்களில் பணியாற்றும் சுமார் 820 ஊழியர்களும் 650-க்கு மேற்பட்டவர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் எனவும் கூறினார்.