கடலுக்கு அடியில் இருக்கும் தபால் பெட்டி.. நீந்தி சென்று கடிதம் அனுப்பும் மக்கள்..!!

Photo of author

By Vijay

கடலுக்கு அடியில் இருக்கும் தபால் பெட்டி.. நீந்தி சென்று கடிதம் அனுப்பும் மக்கள்..!!

இன்றைய காலகட்டத்தில் வளர்ந்து விட்ட தொழில்நுட்பம் காரணமாக நாம் அனைவரும் தொலைவில் இருப்பவர்களிடம் சர்வ சாதாரணமாக வீடியோ காலில் கூட பேசலாம். ஆனால் முன்பெல்லாம் தொலைவி இருக்கும் நபர்களை தொடர்புகொள்ள ஒரே ஒரு வழி தபால் மட்டுமே. அதற்காக வீதிகளில் சிகப்பு நிற தபால் பெட்டிகள் வைத்திருப்பார்கள்.

ஆனால் இப்போதெல்லாம் தபால் பெட்டிகளை பார்ப்பதே அரிதாகி விட்டது. ஏனெனில் இந்த காலத்தில் யார் கடிதம் எழுதுகிறார்கள். ஆனால் இந்த காலத்திலும் இன்னும் கடிதம் எழுதுகிறார்கள். ஒரு நாளைக்கு ஆயிரம் கடிதம் வரை தபால் பெட்டிகளில் மக்கள் அனுப்புகிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

அட உண்மை தாங்க. ஆனால் நம் நாட்டில் அல்ல ஜப்பானில். அதன்படி ஜப்பானில் சுசாமி பே என்ற இடத்தில் கரையில் இருந்து சுமார் 10 மீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் இந்த தபால் பெட்டி அமைந்துள்ளது. இதில் உங்கள் கடித்தத்தை போட வேண்டுமென்றால் நீந்தி சென்று தான் போட வேண்டும்.

தண்ணீரில் கடிதம் நனைந்து விடக்கூடாது என்பதற்காக தண்ணீரால் பாதிக்காத தபால் அட்டைகளை தயாரிக்கிறார்கள். அதில் ஆயில் பெயிண்ட் மூலம் நீங்கள் விரும்புவதை எழுதி தபால் பெட்டியில் போடலாம். கடந்த 2002ஆம் ஆண்டு இந்த தபால் பெட்டி கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தது.

இந்த தபால் பெட்டியில் ஒரு நாளைக்கு சுமார் 1000 முதல் 1500 தபால் அட்டைகள் போடப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகளுக்கு சாகச பயணமாக இருக்கும் இந்த தபால் பெட்டி பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகிறது. மேலும், நீரில் பாதிக்கப்படாத தபால் அட்டைகள், ஆயில் பெயிண்ட் விற்பனை என வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.