ஆளுநருக்கு எதிராக போஸ்டர்ஸ்!! திமுக வழக்கறிஞரின் கைவண்ணம்!!

Photo of author

By Savitha

ஆளுநருக்கு எதிராக போஸ்டர்ஸ்!! திமுக வழக்கறிஞரின் கைவண்ணம்!!

Savitha

ஆளுநருக்கு எதிராக போஸ்டர்ஸ்!! திமுக வழக்கறிஞரின் கைவண்ணம்!!

ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாட்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது வெளிநாட்டு நிதி மூலம் மக்களை தூண்டிவிட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டனர் என்றும் ஒரு மசோதா நிறுத்தி வைப்பது என்றால் கிட்டத்தட்ட அந்த மசோதாவை நிராகரிப்பதாகத் தான் அர்த்தம் என்று பேசியதற்கு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

மேலும் ஏப்ரல் 12 ம் தேதி ஆளுநர் மாளிகையில் முற்றுகை போராட்டமும் திமுக தோழமை கட்சி சார்பில் நடைபெற உள்ள நிலையில்
திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹேமந்த் அண்ணாதுரை என்பவர் சென்னையின் பல்வேறு இடங்களில் சுவரொட்டி ஒட்டியுள்ளார் அதில் ஆட்டுக்கு தாடியும், தமிழ்நாட்டுக்கு ஆர்.என்.ரவியும் எதற்கு? #DictatorRavi #GetoutRavi’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.