பெண்கள் தங்கள் பருவ வயதை எட்டிய பிறகு உடல் மட்டுமின்றி மனதளவிலும் பல விஷயங்களை எதிர்கொள்கின்றனர்.மாதவிடாய் சுழற்சி ஆரம்பித்தது முதல் அவை நின்ற காலத்திற்கு பிறகும் பெண்களுக்கு உடளவில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது.பெண்களுக்கு மாதவிடாய் நிறுத்தம் 50 முதல் 55 வயதிற்குள் நடக்கிறது.
பருவமடைந்த பின்னர் பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும்.குறிப்பாக திருமணமாக உள்ள பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தின் நிலை அறிய நிச்சயம் மருத்துவ பரிசோதனையில் ஈடுபட வேண்டும்.
சிலருக்கு தங்கள் உடல் எடை மற்றும் உயரம் என்ன என்பது கூட தெரியாமல் இருக்கிறது.நீங்கள் முதலில் உங்கள் உடல் எடை மற்றும் உயரத்தை அறிந்து அதை பிஎம்ஐ மூலம் கணக்கிட்டு எந்த அளவில் இருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.உங்கள் உடல் உயரத்திற்கு ஏற்ற உடல் எடை இருக்க வேண்டியது முக்கியம்.
அடுத்து திருமணமாக உள்ள பெண்கள் தைராய்டு டெஸ்ட்,சர்க்கரை டெஸ்ட்,சிறுநீர் டெஸ்ட்,இரத்த அழுத்த டெஸ்ட் போன்றவற்றை எடுக்க வேண்டும்.இதில் அனைத்தும் நார்மலாக இருந்தால் திருமணத்திற்கு பிறகு கருத்தரிப்பில் பிரச்சனை வராமல் இருக்கும்.
அதேபோல் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை இருக்கும் பெண்கள் மருத்துவரை அணுகி உரிய ஆலோசனை பெற வேண்டும்.PCOD,தைராய்டு போன்ற பிரச்சனைகள் இருந்தாலோ அல்லது கருப்பையில் சினைப்பைகட்டி இருந்தாலோ சீரற்ற மாதவிடாய் பிரச்சனை ஏற்படும்.மாதவிடாய் சுழற்சி சரியாக நடந்தால் தான் உடலில் மற்ற இயக்கங்கள் சீராக நடக்கும்.பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில் மட்டுமின்றி அவற்றின் முடிவு காலத்திற்கு பிறகும் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.
சில பெண்களுக்கு மாதவிடாய் நின்ற சிறிது காலம் கழித்து மீண்டும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்படுகிறது.இது கருப்பை சார்ந்த பிரச்சனைகளால் ஏற்படுகிறது.எனவே மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது.
அதேபோல் மாதவிடாய் நின்ற காலத்திற்கு பிறகு பெண்களுக்கு ஈஸ்டிரோஜன் அளவு குறைகிறது.இதனால் மூட்டு வலி,இடுப்பு வலி போன்ற எலும்பு சம்மந்தபட்ட பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகிறது.இரத்த பரிசோதனை,ஹார்மோன் தெரபி,மருந்துகள் மூலம் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.
பெண்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மூலம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டியது முக்கியம்.