பெண்கள் தங்கள் பிரசவத்திற்கு பிறகு சந்திக்க கூடிய ஒரு முக்கிய பிரச்சனையாக உடல் எடை கூடல் உள்ளது.பிரசவத்திற்கு பிறகு நெறைய பெண்களுக்கு தொப்பை போடுகிறது.கீழே கொடுக்கப்பட்டுள்ள பானத்தை தினமும் குடித்து வந்தால் தொப்பை குறைந்துவிடும்.
தேவைப்படும் பொருட்கள்:
1)சுக்கு – 1 துண்டு
2)சீரகம் – 1 தேக்கரண்டி
3)வர கொத்தமல்லி – 1 தேக்கரண்டி
4)தேன் – 1 தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கிவிட்டு நெருப்பில் வாட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு அடுப்பில் வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி சீரகம் மற்றும் ஒரு தேக்கரண்டி வர கொத்தமல்லி சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ளுங்கள்.
பிறகு இந்த மூன்றையும் மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தி கிளாஸிற்கு ஊற்றிக் கொள்ளுங்கள்.இப்பொழுது அரைத்து வைத்துள்ள பொடி ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து இதனுடன் தேன் கலந்து பருகினால் உடலில் உள்ள ஊளைச்சதை குறைந்து தோல் இறுக்கமாகிவிடும்.
தேவையான பொருட்கள்:
1)ஓமம் – 1 தேக்கரண்டி
2)தண்ணீர் – 1 கிளாஸ்
செய்முறை விளக்கம்:
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு தேக்கரண்டி ஓமத்தை போட்டு லேசாக வறுத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.அதன் பிறகு அரைத்த ஓமப் பொடி சேர்த்து கொதிக்க வைத்து பருகினால் பிரசவத்திற்கு பிறகு ஏறிய உடல் எடை கடகடன்னு குறைந்துவிடும்.
தேவையான பொருட்கள்:
1)இஞ்சி – 1 துண்டு
2)எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
இஞ்சி ஒரு துண்டு எடுத்து தோல் நீக்கிவிட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி லேசாக சூடுபடுத்தி எடுத்துக் கொள்ளுங்கள்.இதில் இஞ்சி சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து பருகி வந்தால் பிரசவ தொப்பை குறையும்.