பள்ளி கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு – அமைச்சர் பேட்டி!

0
201
Postponement of opening of school colleges Minister Namachchivayam interview!
Postponement of opening of school colleges Minister Namachchivayam interview!

பள்ளி கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு – அமைச்சர் பேட்டி!

புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள பள்ளி,கல்லூரிகளைத் திறப்பது சிறிது காலம் தள்ளி வைப்பதாக அமைச்சர் நமச்சிவாயம் பேட்டியளித்துள்ளார். கொரோனாவின் முதலாவது அலை தொடங்கிய போது மூடப்பட்டப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. அடுத்தது 2வதுஅலைத் தொடங்கிய பின்னர் முழு லாக்டவுன் போடப்பட்டது.

இரண்டாவது அலை குறைந்து வருவதால் தமிழகத்தில் மீண்டும் 9 முதல்12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் 16 ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு என அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ஜூலை 16 முதல் 9 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும்.

இந்நிலையில் புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் துணைநிலை அமைச்சர் தமிழிசைச் சவுந்தரராஜனை சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார்.கொரோனா 3வது அலை தொடங்கும். இந்நிலையில் பள்ளி கல்லூரிகளை திறக்க கூடாது எனவும், கொரோனா முழுமையாக முடிந்த பிறகு தான் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க வேண்டும் என புதுச்சேரி மாவட்டத்தைச் சேர்ந்தக் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேட்டியளித்துள்ளார். இதனால் புதுச்சேரி மாவட்டத்தில் இருக்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுவது என கேள்விக்குறி ஆயிருக்கிறது.

Previous articleநோய்த்தொற்று பரவலுக்கு நடுவே ரசிகர்களுக்கு விருந்து படைக்க ரெடியாகும் இந்திய அணி!
Next articleநடிகை கொடுத்த புகாரின் பேரில் கணவனை கைது செய்த போலீசார்!