தவெக வில் 3 லட்சம் பேருக்கு பதவி!! அதிர்ச்சியில் உள்ள மற்ற கட்சியினர்!!

Photo of author

By Gayathri

தவெக வில் 3 லட்சம் பேருக்கு பதவி!! அதிர்ச்சியில் உள்ள மற்ற கட்சியினர்!!

Gayathri

Posts for 3 lakh people in Daveka!! Other parties in shock!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி இருக்கக்கூடிய இந்த தருணத்தில், பரபரப்பாக பல்வேறு முடிவுகளையும் அவற்றை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்.

தங்களுடைய கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவினை சிறப்பாக துவங்கி வைத்து அதனோடு மாவட்ட செயலாளர்களையும் படிப்படியாக நியமித்து வரக்கூடிய சூழ்நிலையில், ஓராண்டு நிறைவு விழாவில் தங்களுடைய கட்சியின் தலைவருக்கான சட்ட விதிகள் மற்றும் பிற முக்கிய முடிவுகளை எடுத்து இருப்பதாகவும் அதில் தமிழக வெற்றிக்கழகத்தில் 3 லட்சம் பேருக்கு பதவி வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் மற்ற கட்சியினர் அதிர்ச்சி அடைந்து இருப்பதாகவும் இதுவரை தமிழக வெற்றிக்கழகத்தில் 95 மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட்டு அதன் பின் படிப்படியாக மாவட்ட செயலாளர் களை அமைப்பதோடு 28 குழுக்களை அமைத்து அந்த குழுக்களுக்கு 3 லட்சம் பேரை பிரித்து அவர்களுக்கு பதவி வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாக்கியுள்ளன.

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி இருக்கக்கூடிய மற்ற கட்சிகளுக்கு இது பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக இருக்கிறது. காரணம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்கள் தங்களுடைய கட்சியின் வெற்றிக்காக பல வியூகங்களை அமைத்து அவற்றை திறம்பட செய்வதோடு தங்களுக்கான வாக்கு வங்கியாக 20 சதவீதத்தை பெற்று மேலும் வாக்கு வங்கியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்ற கட்சியினரினுடைய வாக்கு வங்கி உடைபடுமோ என்று பயத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.