உயிருக்கு உலை வைக்கும் உருளைக்கிழங்கு.. மக்களே எச்சரிக்கை!!

0
280
#image_title

உயிருக்கு உலை வைக்கும் உருளைக்கிழங்கு.. மக்களே எச்சரிக்கை!!

உருளைக் கிழங்கில் பல நன்மைகள் இருந்தாலும் உடலுக்கு கேடு ஏற்படுத்தும் சில தீமைகளும் உள்ளது. அதிலும் முளைவிட்ட உருளைக் கிழங்குகளை நாம் சாப்பிட்டால் அது நம் உயிருக்கே ஆபத்தாக முடியும். அவ்வாறு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உருளைக் கிழங்கில் என்னென்ன ஆபத்துக்கள் உள்ளது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

 

* உருளைக் கிழங்குகளை நாம் அதிக நாள் பயன்படுத்தாமல் வைக்கும் பொழுது அது முளைவிட ஆரம்பிக்கும். இந்த முளைவிட்ட உருளைக் கிழங்கை சாதாரண உருளைக் கிழங்குடன் ஒப்பிடும் பொழுது முளைவிட்ட உருளைக் கிழங்கில் சுவையும் ஆரோக்கியமும் குறைவாக தான் இருக்கும்.

 

* முளைவிட்ட உருளைக் கிழங்கில் சாக்கோ நைல்ட், சால் நைல்ட் என்ற இரண்டு நச்சுப் பொருட்கள் உள்ளது. இந்த நச்சுப் பொருட்கள் விஷமாக மாறி நம் உடலுக்கு பல ஆபத்துக்களை ஏற்படுத்துக்கின்றது.

 

* இந்த உருளைக் கிழங்கில் இருக்கும்

இந்த நச்சுப் பெருட்கள் விலங்குகள், பூச்சிகள் போன்றவற்றிற்கு உயிர் கொல்லியாக பயன்படுகிறது. இந்த நச்சுப் பொருட்களை உணவில் சேர்க்கும் பொழுது உடலுக்கு பல பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றது.

 

* இந்த நச்சுப் பொருள் உடலில் இருக்கும் குடலில் எரிச்சலை உருவாக்கி அதன் மூலம் பலவிதமான குடல் நேய்களை ஏற்படுத்துகின்றது.

 

* முளைவிட்ட உருளைக் கிழங்கில் இருக்கும் மாவுப் பொருளான ஸ்டார்ஸ் நம் உடலுக்குள் சென்று சர்க்கரையாக மாறி பல தீமைகளை நம் உடலுக்கு ஏற்படுத்துகின்றது.

 

* அடுத்து உருளைக் கிழங்குகளில் பச்சை நிறத்திட்டுகள் இருக்கும். பின்னர் உருளைக் கிழங்குகளின் தோல் சுருங்கி இருக்கும். இந்த வகையான உருளைக் கிழங்குகளை பயன்படுத்தக் கூடாது.

 

* இந்த உருளைக் கிழங்குகளில் கிரைக்கோள்களாய்டு நச்சுப் பொருள் உள்ளது. இதுவும் நம் உடலுக்கு தீங்கை விளைவிக்கும்.

 

* உருளைக் கிழங்கின் இலை, தண்டு, கனி ஆகிய பகுதிகளை பயன்படுத்துவதை தவிர்த்து கிழங்கு பகுதியை மட்டும் பயன்படுத்தலாம். முக்கியமாக பச்சை நிற உருளைக் கிழங்குகளை பயன்படுத்தக் கூடாது.

 

பச்சை நிற உருளைக் கிழங்கு, தோல் சுருங்கிய உருளைக் கிழங்கு, முளைவிட்ட உருளைக் கிழங்கு சாப்பிட்டால் என்ன ஆகும் என்று பார்க்கலாம்…

 

* பச்சைநிற உருளைக் கிழங்கு, தோல் சுருங்கிய உருளைக் கிழங்கு மற்றும் முளைவிட்ட உருளைக் கிழங்கு போன்றவற்றை நாம் சமைத்து சாப்பிடும் பொழுது நமக்கு தலைவலி, வாந்தி, டயேரியா போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். முதலில் உடல் சோர்வாக இருக்கும். நாள் செல்ல செல்ல இது கோமா நிலைக்கு கொண்டு சென்று உயிரையே பறித்து விடும்.

 

* கருவுற்ற பெண்கள் இந்த முளைவிட்ட உருளைக் கிழங்கை சாப்பிடக்கூடாது. அவ்வாறு சாப்பிட்டால் இது கருச்சிதைவை ஏற்படுத்தும். அது மட்டுமில்லாமல் குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறக்கவும் வாய்ப்பு இருக்கின்றது.

 

உருளைக் கிழங்கை எவ்வாறு முளைவிடாமல் பாதுகாக்கலாம்…

 

* வீட்டில் சேமித்து வைக்கும் உருளைக் கிழங்கின் மேல் கிராம்பு எண்ணெய், புதினா எண்ணெய் ஆகியவற்றை தேய்த்து வைப்பதன் மூலம் முளைவிடாமல் தடுக்கலாம்.

 

* உருளைக் கிழங்கை முளைவிடாமல் பாதுகாக்க இதை ஈரப்பதம் இல்லாத காற்றோட்டம் இருக்கும் பகுதியில் வைக்க வேண்டும்.

 

* சில பேர் உருளைக் கிழங்கை குளிர்சாதனப் பெட்டியில்(Fridge) வைத்து பயன்படுத்துவார்கள். அது முற்றிலும் தவறான செயல். அவ்வாறு உருளைக் கிழங்கை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் பொழுது அதில் இருக்கும் மாவுப் பொருள் சர்க்கரையாக மாறிவிடும். உருளைக் கிழங்கை குளிர்வித்து அதை அதிக வெப்பநிலையில் சமைத்து சாப்பிடும் பொழுது உடலுக்கு பல தீமைகளை ஏற்படுத்தும்.

Previous articleஇனி வலி நிவாராணி தேவை இல்லை.. இதை தேய்த்து அடுத்த நிமிடமே இடுப்பு வலி காணாமல் போகும்!!
Next articleஇந்த வகை ஷாம்புகளால் முடிக்கு ஆயுசு குறைவது உறுதி!! இதனை பயன்படுத்துங்கள்!!