15 நாட்களுக்கு ஒருமுறை ஊற்றுங்கள் நிறைய பூக்கள் கொத்து கொத்தாகப் பூக்கும்!

Photo of author

By Kowsalya

பூக்கள் என்றால் யாருக்குதான் ஆசை இருக்காது. அழகழகாய் அது பூத்துக் குலுங்கும் பொழுது பார்க்க கண்கோடி வேண்டும் என்று நினைப்பவர்கள் பலர் உண்டு. நம் வீட்டுச் செடி மொட்டுக்கள் பெரிய மொட்டுக்களாக விடவும், நிறைய பூக்கள் பூக்கவும் இந்த டிப்ஸை பயன்படுத்தி பாருங்கள்.
இது நீங்கள் எல்லா செடிகளுக்கும் பயன்படுத்தலாம் நல்ல பலனை அளிக்கும்.

தேவையான பொருட்கள்:
1. அரிசி கழுவிய தண்ணீர்
2. அரை டம்ளர் காய்ச்சாத பால்.

செய்முறை:
1. இப்பொழுது நாம் அரிசி கழுவிய தண்ணீரை எடுத்துக்கொள்ள வேண்டும்.முதலில் ஒரு அலசல் அலசி விட்டு அந்த தண்ணீரை கீழே ஊற்றி விட வேண்டும். ஏனெனில் அதில் பூச்சிக்கொல்லிகள் ஏதாவது கலந்து இருக்கலாம். அதனால் ஒரு அலசு அலசி விட்டு கீழே ஊற்றி விட்டு இன்னொரு முறை தண்ணீர் ஊற்றி அதனை நன்கு கழுவி தண்ணீரை மட்டும் தனியே எடுத்துக்கொள்ளவும்.
2. இந்த தண்ணீர் நன்கு புளிக்க வேண்டும். இரவு கழுவிவிட்டு காலை வரை அதனை புளிக்க வைக்கலாம்.தண்ணீர் எவ்வளவு புளிக்கிறதோ அவ்வளவு நல்லது. தண்ணீர் புளிக்கும் பொழுது அரிசி கழுவிய தண்ணீரில் உள்ள நுண்ணுயிரிகள் அதிகமாக வளரும். இந்த நுண்ணுயிரிகள் செடி மற்றும் கொடிகள் வளர மிகவும் பயனுள்ளதாக அமையும். எனவே அரிசி கழுவிய தண்ணீரை நாம் புளிக்க வைக்க வேண்டும்.
3. பின் அரை டம்ளர் காய்ச்சாத பாலை எடுத்துக் கொள்ளவும். ஒரு லிட்டர் அரிசி கழுவிய தண்ணீர் எடுத்தோமேயானல் அரை டம்ளர் காய்ச்சாத பாலை எடுத்துக் கொள்ளலாம். அரிசி கழுவிய தண்ணீரில் ஊற்றிக்் கொள்ளவும். பிறகு அதில் நிறைய தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம். அப்போதுதான் செடிகளில் ஊற்றும் பொழுது எறும்பு தொல்லைகள் இருக்காது.
4. இப்பொழுது எல்லா செடிகளுக்கும் இதனை ஊற்றலாம்.செடியின் மேல் தெளித்தும் விடலாம். ஒரு சில புழுக்கள் இருந்தால் கீழே உதிர்ந்துவிடும்.
5. 15 நாட்களுக்கு ஒரு முறை இதனை செய்தால் போதும்.
6. செடிகள் மிக அழகாகவும் கொத்துக்கொத்தாகப் பூக்கும்.