மின்மீட்டரை பௌலிங் போட்ட மின்வாரிய ஊழியர்!..நொடியில் சஸ்பென்ட்!..

0
232
Power Board employee who bowled the meter!.. Suspended in a second!..
Power Board employee who bowled the meter!.. Suspended in a second!..

மின்மீட்டரை பௌலிங் போட்ட மின்வாரிய ஊழியர்!..நொடியில் சஸ்பென்ட்!..

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி தீர்த்தகிரி நகரை சேர்ந்த தான் இந்த பெண்மணி.இவர் நேற்று மாலை பாலக்கோடு மின்வாரிய அலுவலகத்திற்க்கு வந்து தன்னுடைய வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நீண்ட நேரமாக மின்சாரம் வரவில்லை என புகார் அளித்தார்.

அப்போது பணி உதவி மின்பொறியாளர் இல்லாததால் பணியிலிருந்த வணிக விற்பனையாளர் குப்புராஜ் சரி செய்து தருவதாக அந்த பெண்மணியிடம் கூறினார்.அவர் உறுதி அளித்ததை அடுத்து மீண்டும் மீண்டும் அவர் சொன்னதை காதில் போட்டுக்கொள்ளாமல் அந்த பெண்மணி கத்திக்கொண்டு இருந்தார்.

இதில் கடுப்பான அவர் அலுவலகம் உள்ளே சென்று அமர்ந்தார். அப்போது பெண்மணியின் உடன் வந்தவர்கள் குப்புராஜை தகாத வார்த்தைகளால் பேசினர். இதனால் அதிகம் ஆத்திரமடைந்த குப்புராஜ் எழுந்து அருகில் இருக்கும் மின் மீட்டரை கையில் எடுத்து அவர்கள் மீது கோபத்துடன் வீசினார்.

இதனை செல்போனில் படம் பிடித்தவர்கள் சமூக வலைதளங்களில் பரவ விட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே மின்மீட்டரை தூக்கியடித்த மின்வாரிய ஊழியர் குப்புராஜ் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக பாலக்கோடு உதவி செயற்பொறியாளர் வனித்தா தெரிவித்துள்ளார்.இதனால் சற்று நேரம் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

Previous articleபணம் தர முடியுமா முடியாதா?மனைவியின் அந்த இடத்தில் சிறுநீர் கழித்த  கொடூர கணவன்!
Next articleசேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! விடுதிகளின் பதிவை உறுதி செய்ய கடைசி தேதி வெளியானது!