தமிழகத்தில் இனி மின்தடை கிடையாது! அரசு புதிய அறிவிப்பு!

Photo of author

By Mithra

தமிழகத்தில் இனி மின்தடை கிடையாது! அரசு புதிய அறிவிப்பு!

Mithra

தமிழகத்தில் இனி மின்தடை கிடையாது! அரசு புதிய அறிவிப்பு!

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் இந்த சூழலில், 3 டிகிரி செல்சியல் வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் அனல் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு போடப்பட்டுள்ளதால், அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டிய இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

இப்படிப்பட்ட சூழலில் கடந்த ஒரு மாதமாக மின்தடை குறித்து ஏராளமான புகார்கள் மின்வாரியத்திற்கு குவிந்தன. இதற்கு பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படுவதாகவும், சூறாவளிக் காற்று, திடீர் கனமழை போன்றவையே காரணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு புதிய அறிப்பை வெளியிட்டுள்ளது. ஊரடங்கு அறிவிப்பால் வேலைக்கு செல்லாமல் அனைவரும் வீட்டில் இருப்பதாலும், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள், தேர்வுகள் நடப்பதாலும், மின்சார வாரியத்தால் வழக்கமாக நடத்தப்படும் பராமரிப்புப் பணிகளை ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் முதல் 6 மாதங்களாக பராமரிப்பு பணிகளை செய்யாததால் ஆங்காங்கே மின்தடை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசியமான, தவிர்க்க முடியாத இடங்களில் மட்டும் போர்க்கால அடிப்படையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்ட பிறகு பராமரிப்பு பணிகள் தொய்வின்றி நடைபெறும் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.