நீண்ட நாள் நெஞ்சு சளி பிரச்சனைக்கு உடனடி தீர்வு தரும் பவர்புல் கசாயம்!

Photo of author

By Rupa

மாறி வரும் பருவநிலை மாற்றத்தால் பெரியவர்கள் சிறியவர்கள் என்று அனைத்து வயதினரும் சளி பாதிப்பால் அவதியடைகின்றனர்.சாதாரண சளி பாதிப்பை சரி செய்து கொள்ள தவறினால் அது தீவிர நெஞ்சு சளியாக மாறி கடுமையான அவதிகளை உண்டாக்கிவிடும்.

நெஞ்சு சளி உண்டாக்கும் பாதிப்புகள்:

1)மூச்சு திணறல்
2)தூக்கமின்மை
3)நெஞ்சு வலி
4)நெஞ்செரிச்சல்

நெஞ்சு சளியை போக்கும் பாட்டி மருத்துவம்

1)கருப்பு மிளகு
2)திப்பிலி
3)பானக்கற்கண்டு
4)கடுக்காய்

அடுப்பில் ஒரு கடாய் வைத்து 10 கிராம் கருப்பு மிளகு,10 கிராம் திப்பிலி மற்றும் 10 கிராம் கடுக்காய் சேர்த்து மிதமான சூட்டில் ஒரு நிமிடம் வறுக்கவும்.

இதை ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போடவும்.பிறகு இதில் 10 கிராம் பனங்கற்கண்டு சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

இந்த பவுடரை ஒரு ஸ்பூன் அளவு தினமும் சாப்பிட்டு வந்தால் நெஞ்சு சளி கரைந்துவிடும்.

1)இஞ்சி
2)ஆடாதோடை இலை
3)தேன்

ஒரு ஆடாதோடை இலையை ஆவியில் வேக வைத்து அதன் சாறை ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்.பிறகு ஒரு சிறிய துண்டு இஞ்சியை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்து சாறு எடுக்கவும்.இதை ஆடாதோடை இலை சாற்றில் கலக்கவும்.

அதன் பிறகு சிறிதளவு தேன் கலந்து 20 மில்லி அளவு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் நெஞ்சு சளி தொந்தரவு அகலும்.

1)கற்பூரவல்லி இலை
2)துளசி இலை
3)மிளகு

இரண்டு கற்பூரவல்லி இலை,10 துளசி இலை மற்றும் நான்கு மிளகை பாத்திரத்தில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.தண்ணீர் சுண்டி அரை கப் ஆனதும் ஆறவிட்டு ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடிக்கவும்.இதனால் நெஞ்சில் தேங்கிய சளி கரைந்து மலத்தில் வெளியேறிவிடும்.அதேபோல் தூதுவளை,துளசி,வெற்றிலை உள்ளிட்டவற்றை சம அளவு எடுத்து கசாயம் செய்து குடித்தால் சளி தொல்லை அகலும்.