மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைப்பட்டு செல்கள் பாதிப்படைவதால் பக்கவாதம் ஏற்படுகிறது.உலகம் முழுவதும் பக்கவாதத்தால் ஆண்டிற்கு 50 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர்.சிலர் பக்கவாதத்தில் இருந்து மீண்டு வாழ்கின்றனர்.சிலர் பக்கவாதத்தால் ஏற்பட்ட குறைபாடுகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.
பக்கவாதம் வருவதற்கு முக்கிய காரணங்கள்:
*மது மற்றும் புகைப்பழக்கம்
*வயது முதுமை
*உடற்பருமன்
*சர்க்கரை நோய்
*சிறுநீரக நோய்
பக்கவாத அறிகுறிகள்:
*முகம்,கை மற்றும் கால்களில் உணர்வற்ற தன்மை
*வாய் ஒருபக்கம் இழுத்துக் கொள்ளுதல்
*திடீர் தலைவலி
*பேச்சில் தடுமாற்றம்
*சுயநினைவை இழத்தல்
*கை மற்றும் கால் நடுக்கம்
*பார்வை குறைபாடு
பக்கவாதத்தை குணமாக்கும் வீட்டு வைத்தியம்
1)அமுக்கிரா கிழங்கு சூரணம்
நாட்டு மருந்து கடையில அமுக்கிரா சூரணம் கிடைக்கும். அமுக்கிரா கிழங்கை காயவைத்து பொடியாக்கி பாக்கெட்டில் அடைத்து விற்கப்படுகிறது.
இந்த அமுக்கரா சூரணத்தை கொண்டு பக்கவாதத்தை குணமாக்கி கொள்ளலாம். அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.
பிறகு அதில் அமுக்கிரா கிழங்கு பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்து கொதிக்க வைத்து பருகி வந்தால் பக்கவாதம் குணமாகும்.
2)மருதம்பட்டை சூரணம்
நாட்டு மருந்து கடை மற்றும் சித்த வைத்திய சாலையில் மருதம்பட்டை சூரணம் கிடைக்கும்.ஒரு பாக்கெட் வாங்கிக் கொள்ளுங்கள்.ஒரு பாத்திரத்தில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி மருதம்பட்டை சூரணம் ஒரு தேக்கரண்டி சேர்த்து கொதிக்க வைத்து பருகினால் பக்கவாதம் குணமாகும்.
3)திரிபலா சூரணம்
நெல்லிக்காய்,கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்று பொருட்களை கொண்டு திரிபலா சூரணம் தயாரிக்கப்படுகிறது.இந்த திரிபலா சூரணம் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் வாங்கிக் கொள்ளவும்.
பாத்திரம் ஒன்றில் 150 மில்லி தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி திரிபலா சூரணம் சேர்த்து கொதிக்க வைத்து பருகினால் சில வாரங்களில் பக்கவாதத்தில் இருந்து மீண்டு விடலாம்.