பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு!

0
278
#image_title

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு!

பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் மாஸ்பேட் தீவில் உள்ள மியாகா என்ற இடத்தில் 11 கிலோமீட்டர் ஆழத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மக்கள் பீதியில் உறைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து சுமார் 1 மணி நேரம் கழித்து பின் நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் பல இடங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி அச்சத்தில் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். துருக்கியில் கடந்த வாரம் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்களால் இதுவரை 41,000 பேர் பலியாகினர். நேற்று  நியூசிலாந்தில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Previous articleதொடர்ந்து 4வது நாளாக சரிந்த தங்கம் விலை; சவரனுக்கு ரூ.280 சரிவு!
Next articleமகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்! தங்கம் விலை சரிவு கடைகளில் அலைமோதும் கூட்டம்!