இருட்டறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் அப்டேட்!! ஹுரோயின் யார் தெரியுமா?

0
94

பிரபுதேவா நடிக்கும் 54வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடன இயக்குனர், இயக்குனர் மற்றும் நடிகரான பிரபுதேவா தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பஹுரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். விரைவில் இந்த படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள பொன்மாணிக்கவேல் திரைப்படமும் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து பிரபுதேவா அடுத்ததாக இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது

இந்த படத்தில் பிரபுதேவாவுடன், நடிகை வரலட்சுமி சரத்குமார், ரைசா வில்சன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளனர். இந்தப் படத்தை ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில், தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று சமூக வலைதளங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் தற்போது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

author avatar
Jayachithra