11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று செய்முறைத் தேர்வு தொடங்குகிறது!!

Photo of author

By Parthipan K

11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று செய்முறைத் தேர்வு தொடங்குகிறது!!

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த பொதுத்தேர்வை மாநிலம் முழுவதும் 8,51,482 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர்.

அதே போல 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14ம் தேதி  முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெறுகிறது. 7,87,783 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர்.

இந்நிலையில், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று தொடங்குகிறது. முதற்கட்டமாக மார்ச் 1 முதல் 4 ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்டமாக மார்ச் 6 முதல் 9 ஆம் தேதி வரையிலும் இந்த செய்முறை தேர்வு நடைபெறுகிறது. 

இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், கணினி அறிவியல், தொழிற்கல்வி பயிலும் மாணவர்கள் இன்று செய்முறைத் தேர்வை எழுதுகின்றனர்.