வங்கிக்கு செல்லாமல் கல்விக் கடன் பெறலாமா? மாணவர்களே இது உங்களுக்குத்தான் !

Photo of author

By Kowsalya

பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் இனி வங்கியில் போய் கல்விக் கடனை பெற வேண்டும் என்று அவசியமில்லை.

நம் நாட்டின் பிரதமர் அறிமுகப்படுத்திய இணையதளம் ஒன்றின் மூலமே கல்விக் கடன்களை நாம் நேரடியாக பெறலாம்.

2015ஆம் ஆண்டு பிரதமர் மோடி அவர்கள் இந்திய சுதந்திர தினத்தின்போது வித்யாலட்சுமி என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தினார்.

அது முற்றிலும் மாணவர்களுக்காக கல்வி கடன் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு வலைத்தளம் ஆகும்.

இந்த பிரதான் மந்திரி வித்யாலட்சுமி திட்டம் மாணவர்கள் நிதி இல்லாமல் மேற்படிப்பைத் தொடர்வதற்கு இந்த திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

இந்த வித்யாலட்சுமி திட்டத்தின் கீழ் 39 வங்கிகளும் அதில் 70 கல்வி கடன் பற்றிய திட்டங்களும் வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளன.மேலும் வங்கிகளின் விவரங்களும் கல்விக்கடன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் அதன் விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

இப்பொழுது அனைத்து கல்வி கடன்களும் வித்யாலட்சுமி திட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.கொரோனா ஊரடங்கு காரணமாக சமூக பரவலை தடுப்பதற்காகவும் ஏழை எளிய மாணவர்கள் பயன் பெறவும் இந்த திட்டம் மிகவும் உபயோகமாக கருதப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் மூலமே அனைத்து கல்வி கட்டண விண்ணப்பங்களும் வரவேற்கப்படும் நீங்கள் தனியாக வங்கிகளை நாடி செல்ல தேவையில்லை என மத்திய அரசு கூறியுள்ளது.

எனவே மாணவர்களாகிய நீங்கள் கல்விக் கடனை பெற வேண்டுமெனில் பிரதான் வித்யாலக்ஷ்மி இணையதளத்தை மேற்கொண்டு கடன் வசதியை பெற அதிலுள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தேவையான விவரங்களையும் கொடுத்து எந்த வங்கி மூலம் உங்களுக்கு கடன் வேண்டுமோ அதையும் நீங்களே தேர்வு செய்து விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் அதன்பின் உங்கள் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வங்கி மூலம் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு கடிதம் அனுப்பப்படும்.