பிரதோஷம் என்பது இந்து நாட்காட்டியில், ஒவ்வொரு பக்ஷத்திலும் (அதாவது, ஒவ்வொரு மாதத்தின் வளர்பிறை மற்றும் தேய்பிறை) 13வது நாளாக வரும் ஒரு சிறப்பு நேரமாகும். இந்த 13வது நாள், த்ரயோதசி திதி என்று அழைக்கப்படுகிறது.
பிரதோஷம், சூரியன் மறைவதற்கு 1.5 மணி நேரத்திற்கு முன்னும் பின்னும் உள்ள மூன்று மணிநேரம் என வரையறுக்கப்படுகிறது. இந்த நேரத்தை சிவனை வழிபட மிகவும் உகந்த நேரமாக கருதப்படுகிறது.
பிரதோஷம் என்றால் பாவத்தை தொலைத்துக் கொள்ளும் வழிபாடாகும்.பிரதோஷ காலத்தில் தான் சிவபெருமான் ஆலகால விஷத்தைக் குடித்து உலகத்தை காத்தருளினார். இதனால்தான் பிரதோஷம் என்பது இவ்வளவு சிறப்பிற்குரிய ஒன்றாக திகழ்கிறது.
இந்த நாளில்
விரதமிருந்து வழிபட்டால் சகல பாவங்களும் நீங்கி, புண்ணியங்கள் சேரும். முக்தி கிடைக்கும்.
பிரதோஷம் என்றால் பாவத்தை தொலைத்துக் கொள்ளும் வழிபாடாகும்.
அதாவது பிரதி + தோஷம் என்று பிரிக்கப்படுகிறது. பிரதி என்றால் ஒவ்வொன்றும் எனவும், தோஷம் என்றால் பாபத்தைக் குறிப்பதாகும். பிரதோஷ வழிபாடு செய்வதால் ஒவ்வொருவரும் தங்களுடைய பாவத்தை தொலைத்துக் கொள்ளும் வழி என குறிப்பிடப்படுகிறது.
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒவ்வொரு விதமான வேண்டுதல்களோ ஆசைகளும் இருக்கும். அதை நிறைவேற்றுவதற்காக தான் அவர்களுடைய ஒவ்வொரு நாள் உழைப்பும் தேடலுமாக இருக்கும்.
ஆனால் இது அனைவருக்கும் எளிதில் கிடைத்து விடாது. ஒரு சிலருக்கு எந்த காரியங்களும் அவ்வளவு எளிதில் நடந்தும் விடாது. அது போன்ற காரிய தடைகளை நீக்கவும் இந்த பிரதோஷ வழிபாடு துணை புரியும்.
நீண்ட நாட்கள் நினைத்தும் நடக்க முடியாத காரியங்களை நடத்திக் கொள்ளவும், வீட்டில் மங்கள காரியங்கள் தடைபட்டிருந்தால் அந்த தடை நீங்கி மங்கள காரியங்கள் சிறப்பாக நடைபெறவும் இந்த பிரதோஷ வழிபாட்டை பயன்படுத்திக் கொள்ள முடியும். அதற்கு நாம் செய்ய வேண்டியது நந்தி பகவானுக்கு ஒரே ஒரு பொருளை அபிஷேகத்துக்கு வாங்கித் தருவதுதான்.
பிரதோஷ வேளையிலே நந்தி பகவானுக்கு விசேஷமான அபிஷேகங்களும் அலங்காரங்களும் நடைபெறும். பிரதோஷ வழிபாடு நந்தி பகவானுடைய வேண்டுதலுக்கு உருவானது தான் என்ற புராண கதைகளும் உண்டு.
ஆகையால் இந்த பிரதோஷ வழிபாட்டில் நந்தி தேவருக்கு முக்கிய பங்கு உண்டு. அத்தகைய முக்கியமான நந்தி தேவருக்கு பிரதோஷ வேளையில் நடக்கும் அபிஷேகத்தின் போது ஒரே ஒரு இளநீரை நீங்கள் வாங்கிக் கொடுத்தாலே போதும்.
நந்தி பகவான் எந்த அளவுக்கு மனம் குளிர்ந்து அபிஷேகத்தை ஏற்றுக் கொள்கிறாரோ, அந்த அளவிற்கு சிவபெருமானுடைய மனதும் குளிரும். இதன் மூலம் உங்களுடைய வாழ்க்கையில் இருப்பது வரை இருந்த தடைகள் நீங்கி வெற்றிகள் அமையும்.
குடும்பத்தில் இருந்து இன்னல்கள் நீங்கி மகிழ்ச்சி பொங்கும். அனைத்து துன்பங்களும் நீங்கி நீங்கள் இன்பமாக வாழக் கூடிய யோகத்தை இந்த ஒரு தானம் உங்களுக்கு பெற்றுத் தரும்.