குடியுரிமை திருத்த சட்டம் வாபஸ் கிடையாது – பிரகாஷ் ஜாவடேகர்.

Photo of author

By Parthipan K

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து மேற்கு வங்கத்தில் பிரம்மாண்ட கூட்டத்தை திரட்டி முதல்வர் மம்தா பானர்ஜி போராட்டம் நடத்தினார்.  பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் “குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை ஐ.நா கண்காணித்து, தானே முன்வந்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் ” என கூறினார்.

இந்நிலையில் மம்தா பானர்ஜிக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் “மம்தாவின் பொது வாக்கெடுப்பு கோரிக்கை ஆச்சர்யம் அளிக்கிறது. பார்லிமென்டை மக்கள் தேர்வு செய்துள்ளனர், அந்த பார்லியில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் ஐ.நா எப்படி தலையிட முடியும்.இந்த கோரிக்கையின் மூலம் நாட்டிலுள்ள 130 கோடி மக்களை மம்தா அவமதித்துவிட்டார். அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.” என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் “குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெரும் பேச்சுக்கே இடமில்லை,சட்ட விரோதமாக குடியேறியவர்களை எந்த நாடும் அனுமதிக்காது” என்றார்.