தனுஷின் D44 படத்தில் இணைந்த பிரகாஷ்ராஜ் மற்றும் பாரதிராஜா!! எக்கசக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!!

0
417

நடிகர் தனுஷின் D44 படத்தில் இயக்குனர் பாரதிராஜா மற்றும் பிரகாஷ்ராஜ் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக குட்டி, உத்தமபுத்திரன், யாரடி நீ மோகினி ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் தனுஷின் 44 வது படத்தில் இயக்குனர் பாரதிராஜா மற்றும் பிரகாஷ்ராஜ் இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கு முன் நடிகர் தனுஷுடன் நடிகர் பிரகாஷ்ராஜ் திருவிளையாடல் ஆரம்பம், வேங்கை, அசுரன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது நான்காவது முறையாக தனுஷுடன் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleவெண்கலம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா!! இந்தியாவுக்கு 3வது பதக்கம்!!!
Next articleவிஜய்யை தொடர்ந்து பிரபல நடிகரும் இறக்குமதி செய்த காருக்கு வரிவிலக்கு!! இவருக்கு என்ன செய்ய காத்து இருக்காங்களோ தெரியல!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here