மும்மொழிக் கொள்கை மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் மிகப்பெரிய போராக உருவெடுத்துக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். அப்படியாக நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்கள் அவருடைய கருத்தினை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார் இது பாஜகவினரை கோபமடைய செய்திருக்கிறது.
பிரகாஷ்ராஜ் அவர்கள் பதிவிட்டிருக்கும் கருத்து பின்வருமாறு :-
உங்களுக்கு ஹிந்தி தெரியும் என்பதால் நீங்கள் ஹிந்தியில் பேசுகிறீர்கள், அதற்காக எங்களையும் ஹிந்தியில் பேச வேண்டும் என கட்டாயப்படுத்துவது முறையானது அல்ல என தெரிவித்திருக்கிறார். மேலும், ஹிந்தியில் நாங்கள் பேச வேண்டும் என நீங்கள் கூறுவதற்கு காரணம் உங்களுக்கு ஹிந்தி மட்டும் தான் தெரியும் என்றும் இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது என்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்கள் தமிழில் பதிவிட்டு இருக்கிறார்.
இவருடைய இந்த பதிவானது மத்திய அரசை விமர்சனம் செய்வதுபோல் அமைந்திருப்பதால் மட்டுமில்லாத கெட் அவுட் மோடி என்ற ஹேஷ்டாகையும் இதனுடன் சேர்த்து நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்கள் பதிவிட்டு இருப்பதால் பாஜகவினரை கோபமடைய செய்வதாக மாறி இருக்கிறது.
இவர்களுடைய அதீத கோவத்திற்கு காரணம் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தார் என்றால் முன்பெல்லாம் கோ பேக் மோடி என்று கூறினோம் ஆனால் இனிமேல் தமிழகத்திற்கு மோடி வருகிறார் என்றால் கெட் அவுட் மூடி என்று சொல்வோம் என தெரிவித்திருந்தார்.
இதன் பின் இந்த கெட் அவுட் மோடி என்பது ட்ரெண்டிங் ஆன ஹாஷ் டேகா மாறிவிட்டது. சூழல் இவ்வாறு மும்மொழி கொள்கை குறித்து போராடி வரும் சூழலில் பிரகாஷ்ராஜ் அவர்களும் தமிழக அரசுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்திருப்பது பாஜகவை மறைமுகமாக எதிர்ப்பதாக இருப்பதால் பாஜகவினர் நடிகர் பிரகாஷ்ராஜினுடைய பதிவிற்கு கடுப்பாகி உள்ளனர்.