லியோ திரைப்படம் வெற்றி பெற ஆஞ்சநேயர் கோயிலில் வேண்டுதல்!!! நூதன வழிபாடு நடத்திய நடிகர் விஜய் ரசிகர்கள்!!!

0
128
#image_title

லியோ திரைப்படம் வெற்றி பெற ஆஞ்சநேயர் கோயிலில் வேண்டுதல்!!! நூதன வழிபாடு நடத்திய நடிகர் விஜய் ரசிகர்கள்!!!

நடிகர் விஜய் நடித்து அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ள லியோ திரைப்படம் வெற்றி பெற வேண்டி ஆஞ்சநேயர் கோயிலில் நடிகர் விஜய் ரசிகர்கள் நூதன வழிபாடு நடத்தியுள்ளனர்.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி உள்ளது. லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி உலகம் எங்கும் வெளிய்கவுள்ளது. இதைத் தொடர்ந்து பல வதந்திகள் பரவி வருகின்றது. இந்நிலையில் நாமக்கல் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் லியோ திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டுதல் வைத்து வழிபாடு நடத்தியுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் 18 அடி உயரம் கொண்ட ஒரே கல்லில் செய்யப்பட்ட புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. அங்கு நாமக்கல் மேற்கு மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் நடிகர் விஜய் அவர்களின் புகைப்படத்தை வைத்து மாவட்ட இளைஞரணி சார்பில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து நாமக்கல் மேற்கு மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் சதீஷ் அவர்களின் தலைமையில் ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் தங்கத் தேர் இழுத்து நூதன வழிபாடு மேற்கொண்டனர். லியோ திரைப்படம் வெற்றி பெறவேண்டும் என்று அவர்கள் வேண்டுதல் நடத்தினர்.

இந்த நிகழ்வில் நாமக்கல் மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பலரும், இளைஞர் அணி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்று ஆஞ்சநேயர் கடவுளை வேண்டிக் கொண்டனர்.

Previous articleதென்காசி டூ காசி செல்லும் பாரத் கவுரவ் சுற்றுலா ரயில்!!! நவம்பர் 9ம் தேதி புறப்படுகின்றது!!!
Next articleதீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த வகை குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு வெளியிட்டுள்ள அட்டகாசமான அறிவிப்பு!!