கர்ப்பிணி பெண்களே இந்த டிப்ஸை பாலோ செய்யுங்கள் .. 100% உங்களுக்கு சுகப்பிரசவம் தான்!!

Photo of author

By Rupa

கர்ப்ப காலத்தில் பெண்கள் சுகப்பிரசவம் மூலம் குழந்தையை பெற்றெடுக்க விரும்புவார்கள்.சுகப்பிரசவம் சிறிது நேரம் வலியை கொடுத்தாலும் எதிர்காலத்தில் எந்தஒரு பாதிப்பும் இன்றி நிம்மதியாக வாழமுடியும்.ஆனால் ஆப்ரேஷன் மூலம் குழந்தையை பெற்றெடுக்கும் போது வலி ஏற்படாது என்றாலும் எதிர்காலத்தில் உடல் சார்ந்த பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.எனவே சுகப்பிரசவம் ஆக கீழே கொடுக்கப்படுள்ள வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றவும்.

சுகப்பிரசவம் ஆக செய்ய வேண்டியவை:

1)தினமும் வயிறு மற்றும் தொப்புள் பகுதியில் விளக்கெண்ணெய் ஊற்றி மசாஜ் செய்து குளிக்க வேண்டும்.

2)தினமும் காலையில் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.7 மாதத்திற்கு பிறகு நீண்ட நேரம் நடப்பதை தவிர்க்கவும்.

3)தினமும் எளிய உடற்பயிற்சி மற்றும் யோகா செய்து வந்தால் சுகப்பிரசவம் ஆகும்.

4)இரவில் சீரகத்தை ஊறவைத்து மறுநாள் காலையில் அந்நீரை குடித்து வந்தால் சுகப்பிரசவம் ஆகும்.

5)முருங்கை காம்பு மற்றும் சீரகத்தை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தேன் கலந்து குடித்து வந்தால் சுகப்பிரசவம் ஆகும்.

6)தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.

7)தங்களுக்கு பிடித்த செயல்களை செய்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.பிடித்த பாட்டு கேட்பது,புத்தகம் படிப்பது,ஓவியம் வரைவது போன்ற பழக்கங்கள் உங்களின் மன ஆரோக்கியத்தை நன்றாக வைத்துக் கொள்ளும்.

8)அதிகம் கோபப்படுவது,வருத்தப்படுவது,சோர்வுடன் இருப்பது போன்றவற்றை தவிர்த்து தங்களை கவனித்துக் கொள்வதில் அக்கறை செலுத்த வேண்டும்.

9)சிசு ஆரோக்கியம் குறித்து பரிசோதனை செய்து கொள்வது,பிரஷர் செக் பண்ணுவது,இரத்த பரிசோதனை மேற்கொள்வது போன்றவற்றை உரிய நேரத்தில் செய்ய வேண்டும்.

10)தினமும் இரவு உறங்குவதற்கு முன்னர் இளஞ்சூடான நீரில் குளிக்க வேண்டும்.