பிரசவ வலியில் துடிக்கும் கர்ப்பிணி பெண்! வண்டியை தடுத்து நிறுத்தி லஞ்சம் கேட்ட போலீஸ்!வைரலாகும் வீடியோ!
இந்த காலகட்டத்தில் மனிதநேயம் என்பது காலாவதியாகிவிட்டது. ஓர் ஆட்டோவில் நிறைமாத கர்ப்பிணி பெண் மற்றும் ஒரு குழந்தை இரவு 12 மணியளவில் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக உள்ள டிராபிக் போலீஸ் அந்த ஆட்டோவை நிறுத்தியுள்ளார்.நீ நோ என்ரி வழியில் வந்துள்ளாய். அதனால் ரூ.1500 அபராதம் கட்டிவிட்டு ஆட்டோவை எடுத்து செல் என கூறியுள்ளார்.
அந்த ஆட்டோ ஓட்டுனர் அந்த ட்ராபிக் போலீஸிடம் அவசர சிகிச்சைக்காக சென்று கொண்டிருக்கிறோம். தற்பொழுது அபராதம் கட்ட இயலாது என்று கூறியுள்ளார். ஆனால் அந்த டிராபிக் எஸ் ஐ அபராதம் கட்டாமல் ஆட்டோவை எடுக் கூடாது என்று தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதுமட்டுமின்றி அந்த ஆட்டோ ஓட்டுநரை மிரட்டியுள்ளார். ஆட்டோ ஓட்டுனரோ இங்கு நோ என்ட்ரி என்ற பலகை எதுவும் இல்லை.நான் ஏன் அபராதம் கட்ட வேண்டும்.
அதுமட்டுமின்றி கர்ப்பிணி பெண்ணை சிகிச்சைக்காக அழைத்துக் கொண்டு செல்லும் பொழுது இவ்வாறு அதிகாரி நடந்து கொள்வது சரிதானா?என கேள்வி கேட்க தொடங்கியுள்ளார்.இருவருக்கும் நடந்த வாக்குவாதம் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.நோ என்ட்ரி வலியில் சென்றால் அபராதமாக ரூ.2000 முதல் ரூ.5000 வரை கட்ட வேண்டும்.ஆனால் இந்த எஸ்ஐ அதிகாரியோ ரூ.1500 மட்டும் கட்ட சொன்னது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த பணம் அபராதமாக தெரியவில்லை.அவருக்கான லஞ்சமாக தெரிகிறது.அதுமட்டுமின்றி நிறைமாத கர்ப்பிணி பெண்ணை அழைத்து செல்லும் போது அபராதம் கட்ட சொல்வது சட்டத்திற்கு எதிரானது.இதேபோல தான் சில வருடங்களுக்கு முன்பு கர்ப்பிணி பெண் சென்ற வண்டியை போலீசார் எட்டி உதைத்ததால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தது இன்றளவும் மறக்க முடியாத ஒன்று.