கர்ப்பிணி பெண்கள் இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது! சற்று எச்சரிக்கையாக இருங்கள்!
தற்போது உணவு முறை மாறி வருவதன் காரணமாக கர்ப்பம் அடைவது பெரும் வரமாக உள்ளது. அவ்வாறு கர்ப்பம் அடைந்தால் அந்த பெண்கள் மறுபிறவி எடுக்கின்றார்கள் என கூறுவதுண்டு. கர்ப்ப காலத்தில் பெண்கள் பொதுவாகவே மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
ஒரு சிலருக்கு மூன்று மாதத்தின் முதலில் இருந்தே வாந்தி, மயக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். சிலருக்கு வாந்தி மயக்கம் அதிக அளவு காணப்படாது. அந்த வகையில் கர்ப்ப காலத்தில் பெண்கள் எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்கொள்ள கூடாது என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.
பலரும் சமூக வலைதளங்களில் தேடி எவ்வாறு வாந்தி, மயக்கத்தை தவிர்க்கலாம் என்று அதனை முயற்சி செய்து பலனளிக்காமல் போய்விடுகின்றது.
பொதுவாகவே கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உடல் எடை குறைய வாய்ப்புண்டு. முதல் மூன்று மாத வரை எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும். மேலும் கடைகளில் கவரில் அடைக்கப்பட்டுள்ள பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இனிப்பு வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
முதல் மூன்று மாத காலத்திற்கு வீட்டில் செய்த உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனித்தனி விருப்பங்கள் இருக்கும் அந்த வகையில் அதிகம் விருப்பப்படும் பொருட்களை மட்டும் நாம் சாப்பிடும் பொழுது வாந்தி வருவதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். குறிப்பாக பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.மேலும் பழங்கள் மற்றும் காய்கறிகளை ஜூஸ் செய்து சாப்பிடக்கூடாது.